இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
முந்துவரலாற்றில் எண்ணுதல் செயற்பாடு உடல் உறுப்புகளை வைத்து தொடங்கியது. குறிப்பாக, விரல்களை வைத்து தொடங்கியது. இந்நிலை சில எண்களிலும் எண்ணுப் பெயர்களிலும் பதிவாகியுள்ளது.முதனிலை இந்தோ ஐரோப்பிய எண்குறிகளில் பத்து (Ten), நூறு (hundred) ஆகிய எண்களின் வேர்ச்சொல் விரல் எனும் பொருள் உள்ள *dḱ என்பதாகும். இலத்தின் digitus எனும் சொல் ஆங்கில toe என்பதற்கு இணையானதாகும்.
பின் பழைய கற்காலத்தில் எண்ணிட, தொடக்கநிலையில், சரிபார்ப்புக் குறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் சிக்கலான எண்குறிகள் தொல்பழம் அண்மைக் கிழக்கு நாடுகளில் செம்புக்கால முதனிலை எழுது முறைமையில் தொடங்கியது என உலக அளவில் கருதப்படுகிறது.
முதலில் எண்ணிட பயன்பட்ட சரிபார்ப்புக் குறிகளில் இருந்து எண்குறிகள் உருவாகியுள்ளன. இற்றைக்கு ஏறத்தாழ 35,000 முதல் 25,000 ஆண்டுகட்கு முன்பே எண்ணுதல் வரலாறு தொடங்கிவிட்டது.
புதிய கற்காலத்தில் சரிபார்ப்புக் குறிகளைவைத்து எண்ணிய செயற்பாடு, அண்மைக் கிழக்கு நாடுகளில் மேலும் நுட்பம் எய்த, பல்வேறு முதனிலை எழுது முறைமைகள் தோன்றின.
இத்தகைய முதனிலை எழுது முறைமையில் இருந்து ஆப்புவடிவ எழுத்தமைப்பு செம்புக் காலத்தில் பொருள்களைக் கணக்குவைக்கத் தோன்றியது.
கிமு முதல் ஆயிரத்தில் வாழ்ந்த மோட்ச மக்களிடம் ஒருவகை எண்குறிகல் இருந்துள்ளன.[3] The numerals were tally marks carved on wood, drawn on clay or birch bark. In some places they were preserved until the beginning of 20th century mostly among small traders, bee-keepers, and village elders. These numerals still can be found on old shepherd and tax-gatherer staffs, apiaries, and pottery.[1] [4] [5] [6]
தொல்பழம் எண்குறிகளுக்காகவும் தொடக்கநிலை எண்குறிகளுக்காகவும் ஒருங்குறியில் நிரப்பு பன்மொழித் தளத்தில் பல எண்குறிமுறை நெடுக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன: