முனீஸ்வரநாதர் | |
---|---|
முனீஸ்வரநாதர் | |
அதிபதி | 20வது சமணத் தீர்த்தங்கரர் |
முனீஸ்வரநாதர் (Munisuvrata), சமண சமயத்தின் 20வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] முனீஸ்வரநாதர், கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷர் நிலையை அடைந்தவர். முனீஸ்வரநாதரின் காலத்தில் சைன ராமாயணம் படைக்கப்பட்டதாக கருதுகிறார்கள்.[2] இவரது குரு மல்லிநாதர் ஆவார்.
மன்னர் சுமித்திரருக்கும் - இராணி பத்மாவதிக்கும் பிறந்த முனீஸ்வரநாதர்[3] 30,000 ஆண்டுகள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]
முனீஸ்வரநாதர் குறித்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை எனிலும், சமண சமய சாத்திரங்களின் படி, இவரது நிறம் கருமை, வாகனம் ஆமை, பரிவார யட்சினி பகுரூபினி ஆவார். இவரது மார்பில் உள்ள மச்சத்தின் பெயர் வருணன் என்பர்.[5]
|
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
{{citation}}
: CS1 maint: location missing publisher (link)