முனை பெருவட்டாரம் (The Cape Provinces) தென்னாப்பிரிக்கா என்பது உயிர்ப்புவியியல் இடமாகும். இவ்விடம் தாவரப் பரவல்களை பதிவு செய்வதற்கான உலக புவியியல் திட்டம் (WGSRPD) என்பதன் கீழ் வருகிறது. தென்னாப்பிரிக்காவின் 27வது பகுதியாகும். இதன் குறியீட்டு சொற்ச்சுருக்கம் "CPP" என்பதாகும்.[1] இப்பகுதியில் கிழக்கு கேப், வடக்கு கேப், மேற்கு கேப்[1] ஆகிய முக்கியப் பகுதிகள் அடங்குகின்றன. உலகின் பூத்திணையில் (Phytochorion) கேப் பூச்சூழல் பகுதி(Cape Floristic Region) குறிப்பிடத் தக்க பகுதியாகும், இப்பகுதியானது, 9,000 இனங்களின் அகணியத் தாவரங்களின் பகுதியாகும். தென்னாப்பிரிக்காவின் 69 சதவீதம் தாவரங்கள் இதன் கீழ் வருகின்றன.[2]