Frontline Socialist Party | |
---|---|
தலைவர் | சேனதீர குணதிலக்க |
தொடக்கம் | ஏப்ரல் 9, 2012 |
பிரிவு | மக்கள் விடுதலை முன்னணி |
கொள்கை | கம்யூனிசம், மார்க்சிய-லெனினியம் |
இணையதளம் | |
www.flsocialistparty.com | |
இலங்கை அரசியல் |
முன்னிலை சோசலிசக் கட்சி (Frontline Socialist Party) என்பது இலங்கையின் ஒரு இடதுசாரி அரசியல்கட்சி ஆகும். இக்கட்சி மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றவர்களால் 2012 ஏப்ரல் 9 ஆம் நாள் தொடங்கப்பட்டது[1]. இக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பிரேம்குமார் குணரத்தினம். இவர் தற்போது நாடுகடத்தப்பட்ட நிலையில் ஆத்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் உருவாக்கியுள்ள சம உரிமை இயக்கம் பற்றிய விளக்கக் கூட்டங்கள் பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் ஐரோப்பாவெங்கும் நடைபெற்று வருகிறது. சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில் இன ஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதிய சமூக அமைப்பு முறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளை வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது[2].
சம உரிமைக்கான இயக்கத்தின் இரு உறுப்பினர்கள் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 9 இல் யாழ்ப்பாணத்தில் வைத்துக் காணாமல் போனார்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை[3]. இவர்கள் இலங்கையில் காணாமல் போனதற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் போராட்டங்கள் பல நடத்தி வருகிறார்கள்.