மும்தாஜ் | |
---|---|
![]() | |
பிறப்பு | நக்மா கான் சூலை 5, 1980 ஜம்சேத்பூர், சார்க்கண்ட், இந்தியா |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போது |
மும்தாஜ் (பிறப்பு:5 சூலை 1980) தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.[1][2]
டி. ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா (1999) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலமாகத் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் குஷி (2000), லூட்டி (2001), சாக்லேட் (2001) உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார். 2018 இல், பிக் பாஸ் தமிழ் 2 இல் தோன்றிய பிறகு (இவரது கடைசி ஊடக தோற்றத்தைக் குறித்தது) இவர் திரையுலகில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தொழிற்துறைக்கு திரும்புவதில் ஆர்வமும் இல்லை.[3]
மோனிஷா என் மோனாலிசா (1999) குஷி (2000) சாக்லேட் (2001) ஜெமினி (2002) செல்லமே (2004) இலன்டன் (2005) வீரசாமி (2007), ராஜாதி ராஜா (2009) போன்ற பல படங்களில் தோன்றியதற்காக 2000 களில் இந்திய திரைப்படத் துறையில் பிரபலமான நடிகையாக மும்தாஜ் அறியப்பட்டார்.[4]
மும்தாஜ் தனது பள்ளிப்படிப்பை மும்பை பந்த்ராவில் உள்ள மவுண்ட் மேரிஸ் பள்ளியில் முடித்தார். ஒரு இளம் தீவிர திரைப்பட இரசிகையாக, தனது அறையில் ஸ்ரீதேவி இடம்பெறும் சுவரொட்டிகள் நிறைந்திருப்பதாகவும், பள்ளி பேருந்தில் பிலிம்பிஸ்தான் சுடுடியோவைக் கடக்கும்போது, கலைஞர்களைப் பார்ப்பதற்காக இவர் வெளியே எட்டிப் பார்த்துச் செல்வதாகவும் வெளிப்படுத்தினார்.[2][5][6]
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி ! | ||
---|---|---|---|---|---|
1999 | மோனிசா என் மோனோலிசா | மோனிசா | தமிழ் | ||
மலபார் போலிஸ் | ஜூலி | தமிழ் | |||
ஜனநாயகன் | நான்சி பரேர | மலையாளம் | |||
உனக்காக எல்லாம் உனக்காக | தமிழ் | Item number | |||
2000 | பட்ஜெட் பத்மநாபன் | ஓமண்னா | தமிழ் | ||
குஷி | அனிதா | தெலுங்கு | |||
2001 | Boond | நீலம் | ஹிந்தி | ||
லூட்டி | தமிழ் | ||||
சொன்னால் தான் காதலா | தமிழ் | ||||
ஸ்டார் | தமிழ் | கௌரவ தோற்றம் | |||
வேதம் | பூஜா | தமிழ் | |||
சாக்லேட் | தமிழ் | ||||
மிட்டா மிராசு | வித்யா | தமிழ் | |||
ஏக் தெரா கர் ஏக் மெரா கர் | அனுபம் வர்மா | ஹிந்தி | |||
அழகான நாட்கள் | தமிழ் | ||||
2002 | விவரமான ஆளு | தமிழ் | |||
ரோஜாக்கூட்டம் | தமிழ் | ||||
ஏழுமலை (திரைப்படம்) | சந்தியா | தமிழ் | |||
தாண்டவம் | மலையாளம் | ||||
2003 | திரீ ரோசஸ் (திரைப்படம்) | ரோமா | தமிழ் | ||
தத்தி தாவுது மனசு | தமிழ் | ||||
2004 | மகா நடிகன் | நந்தினி | தமிழ் | ||
குத்து (திரைப்படம்) | நடன மங்கை | தமிழ் | |||
கண்டி | கன்னடம் | ||||
ஏய் | தமிழ் | குத்தாட்டப் பாடல் | |||
செல்லமே | நடிகையாகவே | தமிழ் | கௌரவத் தோற்றம் | ||
2005 | தேவதையைக் கண்டேன் | தமிழ் | |||
லண்டன் | ஐஸ்வர்யா | தமிழ் | |||
2006 | ஜெர்ரி | ஜனனி | தமிழ் | ||
2007 | வீராசாமி | சரசு | தமிழ் | ||
2009 | ராஜாதி ராஜா | ஷைலா | தமிழ் | ||
2012 | பிரிவ்யூ | மலையாளம் | தள்ளிப்போடப்பட்ட திரைப்படம் | ||
2013 | அத்தரிண்டிகி தாரீடி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |