மும்தாஜ் சர்க்கார் | |
---|---|
![]() மும்தாஜ் சர்க்கார் | |
பிறப்பு | மும்தாஜ் சர்க்கார் செப்டம்பர் 15, 1986 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது வரை |
பெற்றோர் | பி.சி.சர்க்கார் இளையவர் ஜாய்சிறி சர்க்கார் |
மும்தாஜ் சர்க்கார் என்பவர், இந்திய நடிகையும் விளம்பரப்படப்பெண்ணுமாவார். பிரபல மாயவித்தைக்காரரன பி.சி சர்க்கார் இளையவர் மற்றும் ஜாய்சிறி சர்க்காரரின் மகளான இவர், வங்காளதேசத்தைச் சேர்ந்த பாடகி மெஹ்ரீனின் இசைத்தட்டில் நடித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். பிர்சா தாஸ்குப்தா இயக்கிய 2010 ஆம் ஆண்டு வெளியான பெங்காலி திரைப்படமான 033 என்பதிலும் நடித்துள்ளார்.[1] தமிழில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் நாயகியின் அக்காவாகவும் நடித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள பெண்களுக்கான நவீன உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்த இவர்.[2] கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் இளங்கலையில் சட்டம் பயின்றுள்ளார் [3]
பெங்கால் அமெச்சூர் குத்துச்சண்டை கூட்டமைப்பின் அனுசரணையில் தெற்கு கொல்கத்தா கிளப்பில் குத்துச்சண்டையில் பயிற்சி பெற்றுள்ள இவருக்கு [4] ஜூடோவிலும் பயிற்சி உண்டு[5] மேலும் குண்டு எறிதலில் YMCA வின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இது தவிர மும்தாஜ் பாரம்பரிய ஜாஸ் நடனக் கலைஞரும் கூட. இவ்வாறு பல்வேறு விளையாட்டு மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவரது முதல் திரைப்படம் பிர்ஷா தாஸ்குப்தா வங்காள மொழியில் இயக்கிய 033[6] என்பதாகும், தொடர்ந்து ஷௌமிக் சென்னின் நோ ப்ராளம் என்பதில் ஆரம்பித்து பூட்டர் பாபிஷ்யத், ஆச்சார்ஜ்யா ப்ரோதீப், மேகே தாகா தாரா, தீனாங்கோ, கண்டிஷன்ஸ் அப்ளை மற்றும் டார்க் சாக்லேட் என பல்வேறு வங்காள மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கடைசி கதையை அடிப்படையாகக் கொண்ட வங்காளத் திரைப்படமான முஸல்மானிர் கல்போ (தி ஸ்டோரி ஆஃப் தி முஸ்லீம் கேர்ள்) என்ற படத்தில் மோசமான கொள்ளைக்காரரான "மதுமல்லரால்" கடத்தப்பட்ட "கமலா" என்ற அழகான இந்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் பிப்லாப் சாட்டர்ஜி என்பவரும் நடித்துள்ளார்.[7][8]
தொடர்ந்து மோக்ஸி குழுமம் மற்றும் என்டிடிவி இமேஜின் இடையே ஒரு கூட்டு முயற்சியாக தயாரிக்கபட்ட திரைப்படமான (033) என்பதில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு பங்களாதேஷ் இசைக்குழுவை உருவாக்கி, நகரின் எஸ். டி. டி குறியீட்டின்பெயரால் பெயரிடப்பட்ட இளைஞர்களின் குழுவைப் பற்றிய படமாகும்.[9] சந்திரபிந்து இசையமைத்துள்ள இப்படத்தில் சுவஸ்திகா முகர்ஜி, பரம்ப்ரதா சாட்டர்ஜி, சபியாசாச்சி சக்ரவர்த்தி மற்றும் ருத்ரானில் கோஷ் போன்றோரும் நடித்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டில் சுனில் கங்கோபாத்யாய் எழுதிய புகழ்பெற்ற சாகசத் தொடரான காகபாபு என்பதை அடிப்படையாகக் கொண்ட கொல்கத்தர் ஜோங்கோல் மற்றும் ராஜ்பரிர் ரஹாசியா என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார். இதன் அடுத்தடுத்த பாகங்களும் எதிர்காலத்திட்டங்களாக உள்ளது.[10]. இந்த தொலைக்காட்சித் திரைப்படங்களை மஹுவா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
"கோயல்" என்ற இளம் பெண்ணின் காதலைப் பற்றிய படமான பூட்டர் பாபிஷ்யாட் 2012 ஆம் ஆண்டில் வெளியாகி, இவரது கிரீடத்திற்கு மற்றுமொரு வெற்றிக்கான இறகுகளைச் சேர்த்தது.[11] மிகப்பரவலாக வெற்றியடைந்த இப்படத்தில் பரம்ப்ரதா சாட்டர்ஜி, சபியாசாச்சி சக்ரவர்த்தி, ஸ்வஸ்திகா முகர்ஜி மற்றும் மிர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அதே ஆண்டில் வெளியான இவரது மற்றொரு படமான <i id="mwYQ">காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்</i> துப்பரியும் வகையச் சார்ந்ததாகும். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் நந்தினி என்ற கதாபாத்திரத்தை சுற்றி கதை சுழல்கிறது, அவர் 3 முறை திருமணம் செய்து கொண்டு மர்மமான சூழ்நிலைகளில் இறந்துவிடுகிறார்.[12] இயக்குநர் கோஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குநர் சென் இயக்கிய ஆத்மகோபன் படத்தில் சுபாஷ் சாட்டர்ஜியின் மகளாக "அனு" என்ற கதாபாத்திரத்தில் மும்தாஜ் நடித்துள்ளார்.[13]
டார்க் சாக்லேட் என்ற படத்தில் பாயல் முகர்ஜியாக மும்தாஜ் நடித்துள்ளார்.
தமிழில் முதன்முதலாக இளம் பெண் குத்துச்சண்டை வீரராக அறிமுகமாகிய இறுதிச் சுற்று மிகப்பெரிய வெற்றிப்படமாகும். இதில் கதாநாயகியான ரித்திகா சிங்கின் அக்காவாக லட்சுமி (லெஸ்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக ஆர். மாதவன் நடித்துள்ளார். இதன் இந்திப்பதிப்பான சலா கதூஸ் என்ற படத்திலும் அதே பாத்திரத்தில் நடித்ததோடு இதன் வழியாக பாலிவுட்டிலும் அறிமுகமாயுள்ளார்.
தமிழ் திரைப்படமான சி/ஓ காதலில்[14], மும்தாஜ் ஒரு முஸ்லீம் பெண்ணாக சலீமா என்ற வேடத்தில் நடித்துள்ளார், காதலுக்கு வயது இல்லை என்பதையும், சரியான நபரை சந்தித்தால் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் காதலிக்க முடியும் என்பதையும் இப்படம் காட்டுகிறது.
மேலும் தொலைக்காட்சி தொடரான சரித்ராஹீன் மற்றும் ஹோயிச்சோவில் வெளியான விறுவிறுப்பு தொடரான ஷோப்டோ ஜாப்டோவிலும் தோன்றியுள்ளார்.
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி |
---|---|---|---|
2009 | ஏக் பார் போலோ உத்தம் குமார் | பாபி | பெங்காலி |
2009 | போராய்ஃ விடியலின் நோய்கள் | வங்காள மொழி (வங்காளதேசம்) | |
2010 | 033 | ரியா | பெங்காலி |
2010 | முஸல்மானிர் கால்போ | கமலா/மெஹர்ஜான் | பெங்காலி |
2011 | கொல்கத்தர் ஜோங்கோல் | பெங்காலி | |
2011 | ராஜ்பாரிர் ரஹாசியா | பெங்காலி | |
வெளியிடப்படாத | ஷிந்துக் ரஹாசியா | பெங்காலி | |
2011 | சுது டோமகே சாய் | பெங்காலி | |
2012 | கோயெட்டி மேயர் கோல்போ | ஷாவோனி | பெங்காலி |
2012 | பூட்டர் பாபிஷியட் | கோயல் தார் | பெங்காலி |
வெளியிடப்படாத | கொல்கத்தா 2012[15] | ||
2013 | ஆத்மகோபன் | அனு. | பெங்காலி |
2013 | ஜ்வாலா | ||
2013 | பாதி தீவிரம் | பெங்காலி | |
2013 | நோ ப்ராப்ளம்[சான்று தேவை] | பெங்காலி | |
2013 | நாடகம். | இஷிகாதான் | பெங்காலி |
2013 | அஷ்கோர்ஜோ ப்ரோடீப் | மாலா மால் | பெங்காலி |
2013 | நயிகா சங்கபாத் | அனுராதா | பெங்காலி |
2013 | மெகே டாக்கா தாரா | சுப்ரியா தேவி | பெங்காலி |
2014 | ஷேஷ் ஆங்கர் கேலா[சான்று தேவை] | பெங்காலி | |
2014 | காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் | நந்தினி | பெங்காலி |
2015 | அழுக்கு படம் அல்ல | பெங்காலி | |
2016 | இறுதிச் சுற்று[14] | லக்ஸ்மி "லக்ஸ்" | தமிழ் |
டார்க் சாக்லேட் | பாயல் முகர்ஜி | பெங்காலி | |
நாயக்கர் மாடோ | ராணி | பெங்காலி | |
டீன் ஏஞ்சல் | பெங்காலி | ||
சாலா கதூஸ் | லட்சுமி (லட்சுமி) | ஹிந்தி | |
2017 | குரு. | லட்சுமி (லட்சுமி) | தெலுங்கு |
2017 | ஜீரோவில் வாழ்க்கை | குஹு | பெங்காலி |
2017 | ராக்டோகோரோபி | நந்தினி | |
2018 | ஜோல் ஜோங்கோல் | ||
2019 | மாயா-இழந்த தாய் | வங்காள மொழி (வங்காளதேசம்) | |
2021 | சி/ஓ காதல் | சலீமா | தமிழ் |
2022 | ஷபாஷ் மித்து | ஜுலன் கோஸ்வாமி[16] | ஹிந்தி |
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | ரெப். |
---|---|---|---|---|
2019 | சரித்ரான் 2 | நிருபமா | பெங்காலி | ஹோயிச்சோய் |
2020 | சரித்ரான் 3 | நிருபமா | பெங்காலி | ஹோயிச்சோய் |
2020 | ஷோப்டோ ஜோப்டோ | சுலக்னா | பெங்காலி | ஹோயிச்சோய் |