மும்பை ஜிம்கானா

மும்பை ஜிம்கானா
எஸ்பிளானடே மைதானம்
அசாத் மைதானம்
மும்பை ஜிம்கானா மைதானம்
அரங்கத் தகவல்
அமைவிடம்தென் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உருவாக்கம்19 சூன், 1875
இருக்கைகள்15,000
உரிமையாளர்பிரிஹன் மும்பை மாநகராட்சி
கட்டிடக் கலைஞர்கிளாட் பேட்லி
இயக்குநர்மும்பை ஜிம்கானா
குத்தகையாளர்இந்திய ரக்பி அணி,
உள்ளூர் சங்கங்கள்
முடிவுகளின் பெயர்கள்
n/a
பன்னாட்டுத் தகவல்
ஒரே தேர்வு15 டிசம்பர், 1933:
 இந்தியா இங்கிலாந்து
12 ஆகஸ்டு 2015 இல் உள்ள தரவு
மூலம்: Bombay Gymkhana Ground, Cricinfo

மும்பை ஜிம்கானா (Bombay Gymkhana) என்பது மும்பையில் 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உடற்பயிற்சிப் போட்டி விளையாட்டுப் பொதுவிடம் ஆகும்.[1] இதனை கிளாட் பேட்லி எனும் பொறியாளர் வடிவமைத்தார்.[2]

விளையாட்டுகள்

[தொகு]
மும்பை ஜிம்கானா c. 1905

நீளமான இந்த கட்டிடமானது முகப்பறை, மேசைப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானம், உணவகம் மற்றும் ஓய்விடம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த சங்கத்தில் உறுப்பினராவது சற்று கடினமாகும்.[3] இங்கு துடுப்பாட்டம் குளிர்காலத்திலும் ரக்பி மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் பருவப் பெயர்ச்சிக் காற்று காலங்களிலும் விளையாடப்படுகிறது. இந்த மைதானத்தில் டிசம்பர் 15, 1933இல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் நடைபெற்றது.[4] இந்தப் போட்டிக்கு சி. கே. நாயுடு தலைவராக இருந்தார். அந்தப் போட்டியில் 50,000 பார்வையாளர்கள் இருந்தனர்.மேலும் வழக்கமான விலையை விட ஐந்து மடங்கு அதிகமான விலைக்கு நுழைவுச் சீட்டு விற்பனையானது.[5] இந்தப் போட்டியில் லாலா அமர்நாத் நூறு ஓட்டங்கள் அடித்தார். இது இந்தியத் துடுப்பாட்ட அணியின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.[6]

சான்றுகள்

[தொகு]
  1. Sarkar, Arita (21 August 2016). "Once Upon A Time: Bombay Gymkhana was first club to bring multiple sports together". The Indian Express. https://indianexpress.com/article/cities/mumbai/once-upon-a-time-bombay-gymkhana-was-first-club-to-bring-multiple-sports-together-2988064/. 
  2. "Bombay gymkhana plans to shut kitchens: The History". Mid Day. பார்க்கப்பட்ட நாள் 2009-06-17.
  3. "New clubs on the block". Daily News and Analysis. Archived from the original on 5 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-17.
  4. "Gymkhana Ground: Test Matches". ESPN Cricinfo. 17 சூன் 2011. Archived from the original on 16 திசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2011.
  5. "When Test cricket came to India". ESPNCricinfo. 29 April 2006. http://www.espncricinfo.com/magazine/content/story/245528.html. பார்த்த நாள்: 28 February 2012. 
  6. "'Pure romantic, Byron of Indian cricket'". The Hindu. 6 August 2000 இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130915054431/http://www.hindu.com/2000/08/06/stories/07060282.htm. பார்த்த நாள்: 28 February 2012.