ரீகல் சினிமா | |
---|---|
![]() | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | கலை யந்திரம் |
நகரம் | மும்பை |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1933 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | சார்லஸ் ஸ்டீவன்ஸ் |
ரீகல் சினிமா (Regal Cinema) மும்பையில் உள்ள கொலாபா காஸ்வேயி்ல் அமைந்துள்ளது.[1] இது அழகான வேலைப்பாடுகளால் ஆன திரையரங்கம் ஆகும். இந்த திரையரங்கம் ஃப்ராம்ஜி சித்வாவால் கட்டப்பட்டது.[2] ரீகல் சினிமாவில் ஒளிபரப்பப்ட்ட முதல் படம் லாரல் மற்றும் ஹார்டி ஆகும்.
ரீகல் சினிமா 1930ஆம் ஆண்டு மும்பையில் கட்டப்பட்டது. 1933ஆம் ஆண்டு திறக்கப்பட்டது[2]. 19ஆம் நூற்றாண்டு பிரபல கட்டிடக் கலைஞர் சார்லஸ் ஸ்டீவன்ஸ் இத்திரையரங்கினை வடிவமைத்தார்.[3] உட்புறக் கண்ணாடி வேலைப்பாடுகளை கார்ல் ஷாரா வடிவமைத்தார். பிரதான கலையரங்கில் வெளிர் ஆரஞ்சு மற்றும் ஜேட் பச்சை நிறத்தில் சூரிய உதயங்கள் இருந்தன. ரீகல் சினிமாவின் வெளிப்புறம் காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். ரீகல் சினிமா முழுமையாக வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சிமெண்டில் கட்டப்பட்டது. தியேட்டர் முழுவதும் குளிரூட்டப்பட்டது. ரீகல் சினிமா மும்பையி்ல் முன்னணி திரையரங்காக விளங்குகிறது.