மும்பை–சென்னை வழித்தடம் | |||
---|---|---|---|
மும்பை, சத்திரபதி சிவாசி முனையம் (மேல்) மற்றும் சென்னை மத்தி, மும்பை–சென்னை வழித்தடத்தின் முனையங்கள் | |||
கண்ணோட்டம் | |||
நிலை | செயல்பாட்டு | ||
உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
வட்டாரம் | மகாராட்டிரம், கருநாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு | ||
முனையங்கள் |
| ||
சேவை | |||
செய்குநர்(கள்) | மத்திய இருப்பு வழி, தெற்கு மத்திய இருப்பு வழி, தெற்கத்திய இருப்பு வழி | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 1871 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 1,281 km (796 mi) | ||
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 2/1 | ||
தட அளவி | 5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை | ||
மின்மயமாக்கல் | 25 கி.வோ. 50 ஏ மா. மி. மேல்செல்லும் கம்பிகள் | ||
இயக்க வேகம் | 130 km/h (81 mph) | ||
மிக உயர்ந்த நிலைமுகம் | லோணாவ்ளா 622 மீட்டர்கள் (2,041 அடி) | ||
|
மும்பை–சென்னை வழித்தடம் (Mumbai–Chennai line), முன்பு பம்பாய்–மெட்ராஸ் வழித்தடம் என்று அழைக்கப்பட்டது, சென்னை மற்றும் மும்பை தக்காண பீடபூமியின் தெற்குப் பகுதி முழுவதும் இணைக்கும் இரயில் பாதையாகும். இது மகாராட்டிரம், கருநாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 1,281 கிலோமீட்டர்கள் (796 mi) தூரத்தை உள்ளடக்கியது. மும்பை–சென்னை வழித்தடம் வைர நாற்கரத்தின் ஒரு பகுதியாகும். 03 செப்டம்பர் 2022 அன்று இந்த வழித்த்டம் இரட்டை வழித்தடமாகவும், மின்மயமாக்கவும் மாற்றப்பட்டது. [1]
1281 கி.மீ தூரம் கொண்ட பாதையானது பல பெருநகரங்களை இணைக்கும் நீண்ட மற்றும் ஓய்வில்லாத வழித்தடங்களை கொண்டுள்ளது. மேலும் சிறிய பிரிவுகளில் மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து இருந்து தானே வரை இந்தியாவின் முதல் இரயில் 1853 ஏப்ரல் 16 அன்று கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வேயின் பாதை அமைக்கப்பட்டது. 1854 இல் பின்னர், இது கல்யாண் வரை நீட்டிக்கப்பட்டது. 1856 இல் பின்னர், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் தென்கிழக்கு பகுதியான கோபோலி வழியாக பாலசாத்ரி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது. 1858 ஆம் ஆண்டில் போர் காட் முழுவதும் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்தபோது, கந்தாலா- புனே பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. கந்தாலாவுடன் இணைக்கப்பட்ட பாலசாத்ரி - போர் காட் இருப்புப்பாதை பணி 1862 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது, இதன் மூலம் மும்பை மற்றும் புனே இடையேயான பணி முடிவுற்றது.[2] 1871 ஆம் ஆண்டில் ராய்ச்சூருக்கு அதன் பாதையை விரிவுபடுத்தியதுடன், சென்னை ரெயில்வேயை இணைத்தது. இதனால் மும்பை-சென்னை நேரடி இணைப்பு ஏற்பட்டது.[3]
தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவில் மூன்றாவது ரயில் சேவையான சென்னை ரெயில்வே தனது சேவையை இராயபுரத்திலிருந்து வியாசர்பாடியில் ஆரம்பித்தது. பைபூர் முதல் கடலுண்டி வரை (கோழிக்கோடு அருகே) விரிவாக்கியது, மற்றும் 1861 ஆம் ஆண்டில் இப்பணியானது அரக்கோணத்தின் வடமேற்கில் இருந்து தொடங்கப்பட்டு ரேணிகுண்டாவை அடைந்தது.[2] 1871 ஆம் ஆண்டில் மற்றொரு பாதை அரக்கோணத்திலிருந்து ராய்ச்சூரை அடைந்தது, இந்தப்பாதை கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வேயுடன் இணைக்கப்பட்டது.[3]
1930இல் கல்யாண்-புனே இருப்புப்பாதை பிரிவு நேரடி (டிசி) மின்மயமாக்கப்பட்டது.[4] மற்றும் 2010இல் மாற்று மின்சார அமைப்பிற்கு (ஏசி) மாற்றப்பட்டது. 2012 இல் புனே-சோலாப்பூர்-வாடி வரையிலான இருப்புப்பாதைத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் ரூபாய் 1,500 கோடி ரூபாய் திட்டத்தில் பணி தொடங்கப்பட்டது.[5][6] பின்னர், புனே-வாடி-குண்டக்கல் பிரிவில் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்றது. 2012 ஏப்ரல் 1இல் முழு பாதையான 641 கி.மீ. தூரத்திற்கான பணிகள் தொடரப்பட்டது.[7]
கல்யாண்-புனே-டவுண்ட்-வாதி-செகந்தராபாத்-காசிபேட் பாதை மற்றும் வாடி-ராய்ச்சூர்-அதோனி-அரக்கோணம்-சென்னை மத்திய பாதை என வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், இந்தப் பாதையில் வண்டிகள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்லலாம்.[8] மும்பை சத்ரபதி சிவாசி தொடருந்து நிலையம் மற்றும் கல்யாண் இடையேயான இருப்புப்பாதை 'குழு A வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரயில்கள் மணிக்கு 160 கிமீ வரை வேகப்படுத்தலாம்.
புனே, சோலாப்பூர் மற்றும் சென்னை மத்தி ஆகிய இடங்களில் இரயில்வேயின் முன்பதிவு நிலையங்கள் உள்ளன.[9] மும்பை-சென்னை இணைப்பு வைர நாற்கர திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)