முயீன் கான்

முயீன் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைN/A
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 69 219
ஓட்டங்கள் 2741 3266
மட்டையாட்ட சராசரி 28.55 23.00
100கள்/50கள் 4/15 -/12
அதியுயர் ஓட்டம் 137 72*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
128/20 214/73
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 7 2005

முகம்மது முயீன் கான் (Muhammad Moin Khan (உருது: محمد معین خان‎; பிறப்பு: செப்டம்பர் 23. 1971)[1], முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். 1990 இலிருந்து 2004 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 69 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 219 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 2000 / 2001 பருவ ஆண்டுகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 3,000 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும் குச்சக் காப்பாளராக 200 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.சூலை, 2013 ஆம் ஆண்டில் இக்பால் கசிமிர்குப் பதிலாக பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்[2]. பெப்ரவரி 11, 2014 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[3]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

1990 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 23 இல் பைசலாபாத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார்.

இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 16 ஓவர்கள் வீசி 72 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் இலக்குகளைக் கைப்பற்றவில்லை. இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். 43 பந்துகளை சந்தித்த இவர்24 ஓட்டங்கள் எடுத்து அம்ரோசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 52 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து வால்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[4]

ஒருநாள் போட்டிகள்

[தொகு]

1990 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . நவம்பர் 13, முல்தானில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். 36 பந்துகளில்23 ஓட்டங்கள் எடுத்து பிஷப்பின் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் இவர் விளையாடினார். இதில் 1992 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி கோப்பையை வென்றது. 1999 ஆம் ஆண்டில் இறுதிப் போட்டியில் தோல்வி பெற்றது. தனது துடுப்பாட்ட வாழ்க்கையில் இவர் சக வீரரான ரசீத் லதீஃப் உடன் இணைந்து குச்சக் காப்பாளராக செயல்பாட்டார். இதில் ரசித் 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடினார். இவர் ரசீத்தை விட அதிக துடுப்பாட்ட சராசரி வைத்திருந்தார். மேலும் அவரை விட சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தார் .இவர் ஒரு தேர்வுப் போட்டிக்கு சுமார் 2.14 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனால் ரசீத் 3.51 இலக்குகளைக் கைப்பற்றினார்.

1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தொடரில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு அரையிறுதிப் போட்டியில் 8 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது இவர் ஆறு ஓட்டஙகளை அடித்தார் பின் 7 பந்துகளில் 3ஓட்டங்கள் தேவைப்பட்டபோது இவர் நான்கு ஓட்டங்கள் அடித்து அணியினை வெற்றி பெறச் செய்தார். இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணிக்கு 50 ஓவர்களில் 249 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செயப்பட்டது. இதில் இவருக்கு துடுப்பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 3 இலக்குகளை கேட்ச் பிடித்து அணியை வெற்றி பெற உதவினார்.[6]

சான்றுகள்

[தொகு]
  1. "Moin Khan", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  2. "Moin Khan appointed as chief selector for Pakistan". Sky Sports. 15 July 2013. http://www1.skysports.com/cricket/news/article/8825166/moin-handed-top-pakistan-role. பார்த்த நாள்: 15 July 2013. 
  3. http://www.espncricinfo.com/pakistan/content/current/story/718163.html
  4. "2nd Test, West Indies tour of Pakistan at Faisalabad, Nov 23-25 1990 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  5. "3rd ODI, West Indies tour of Pakistan at Multan, Nov 13 1990 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  6. http://www.cricinfo.com/ci/engine/current/match/65154.html