![]() | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
விளையாட்டு | |
விளையாட்டு | நீச்சல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், மேசைப் பந்து |
மாற்றுத்திறனாளர் | ஆம் |
முரளிகாந்த் பெட்கார் (Murlikant Petkar) என்பவர் பாரா ஒலிம்பிக் எனப்படும் இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக முதன் முதலில் தங்கப் பதக்கத்தை வென்றவர் ஆவார். செருமனியின் ஐடெல்பெர்கு நகரில் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால இனை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இவர் தனிநபர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 50 மீட்டர் நீள கட்டற்ற முன்னோக்கு நீச்சல் போட்டிப் பிரிவில் பந்தய தொலைவை 37.33 நொடிகளில் கடந்து உலக சாதனையை முரளிகாந்த் நிகழ்த்தினார். இதே போட்டியில் ஈட்டி எறிதல், தடை பனிச்சறுக்கு படகுப் போட்டி ஆகிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றார். இம்மூன்று பிரிவுகளிலும் இவர் இறுதிச் சுற்று வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது [1]. 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது [2].
முரளிகாந்த் பெட்கார் இந்திய ராணுவத்தில் மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் படைப் பிரிவில் கைவினைஞர் பதவியில் பணிபுரிந்தார் [3]. பாக்கித்தான் நாட்டிற்கு எதிரான 1965 போரின்போது மோசமாக குண்டடிபட்டு இவர் மாற்றுத் திறனாளியானார் [4]. பெக்கார் முதலில் செகந்திராபாத்தில் மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் படைப் பிரிவில் பணிபுரிந்தபோது ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தார். ஊனமுற்ற பின்னர் அவர் நீச்சல் மற்றும் பிற விளையாட்டுகளுக்கு மாறினார் [5]. மேலும் இவர் 1968 இணை ஒலிம்பிக் போட்டிகளில் மேசைப் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்று முதல் சுற்றில் வெற்றி பெற்றார். நீச்சல் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்றார். பின்னர் இவர் புனேயில் அமைந்திருக்கும் டாட்டா மோட்டார்சு நிறுவனத்தில் பணிபுரிந்தார் [6].
.