ஆடுகளம் முருகதாஸ் | |
---|---|
பிறப்பு | முருகதாஸ் ஆர்யன்குப்பம், பாண்டிச்சேரி |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004 - தற்போது வரை |
ஆடுகளம் முருகதாஸ் என்றறியப்படும் முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆவது ஆண்டில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுசின் நண்பராக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றமையால் ஆடுகளம் முருகதாஸ் என்று பரவலாக அறியப்படுகிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் 2004 ஆவது வெளியான கில்லி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகம் ஆனார். கபடி அணியில் ஒருவராக சில காட்சிகளில் நடித்திருந்தார். இருப்பினும் வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாகவே அனைவராலும் அறியப்பட்டார். மௌனகுரு திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. "அற்புதமான குணச்சித்திர நடிகர்" என தி இந்து பாராட்டியது.[1] 2012 ஆவது ஆண்டில் தடையறத் தாக்க, முகமூடி திரைப்படங்களில் நடித்திருந்தார்.[2]
2013 ஆவது ஆண்டில், சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப் புலி திரைப்படத்தில் சசிகுமாரின் நண்பராகவும், தகராறு திரைப்படத்தில் நான்கு முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராகவும், கண் பேசும் வார்த்தைகள் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருந்தார்.[3] பாலமித்ரன் இயக்கும் கள்வர்கள் திரைப்படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.[4]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2004 | கில்லி | ஆதிவாசி | |
2006 | புதுப்பேட்டை | ||
2009 | வெண்ணிலா கபடிக் குழு | ||
2011 | ஆடுகளம் | ஊளை | |
மௌனகுரு | பாபு | ||
2012 | தடையறத் தாக்க | வேலு | |
முகமூடி | |||
2013 | கண் பேசும் வார்த்தைகள் | அப்புக்குட்டி | |
குட்டிப் புலி | |||
தகராறு | ஆறுமுகம் | ||
2014 | இது கதிர்வேலன் காதல் | கதிர்வேலனின் நண்பர் | |
குக்கூ | கவாசு | ||
ஜிகர்தண்டா | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
கள்வர்கள் | |||
2015 | ஈட்டி | புகழின் நண்பர் | |
2016 | விசாரணை | முருகன் | |
அஞ்சல | கல்யாண ராமன் | ||
சைத்தான் | இரவி |