முரெக்சு திராபா | |
---|---|
முரெக்சு திராபா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | கிளை கேனோகசுட்ரோபோடா
கிளை கைப்போகேசுட்ரோபோடா கிளை நியோகேசுட்ரோபோடா |
பெருங்குடும்பம்: | முரிகோயிடே
|
குடும்பம்: | முரிசிடே
|
துணைக்குடும்பம்: | முரிசினே
|
பேரினம்: | |
இனம்: | மு. திராபா
|
இருசொற் பெயரீடு | |
முரெக்சு திராபா உரோடிங், 1798 | |
வேறு பெயர்கள் [1] | |
|
முரெக்சு திராபா (Murex trapa), என்பது அரிய-முள் முரெக்சு என அறியப்படுகிறது. இது பெருங்கடல் வயிற்றுக்காலி மெல்லுடலி தொகுதியில் முரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாறை நத்தை ஆகும்.[1]
இந்த இனம் மடகாசுகர் மற்றும் மஸ்கரேன் தீவுகள், தென்கிழக்கு இந்தியா, இலங்கை மற்றும் அந்தமான் கடல் முதல் தெற்கு இந்தோனேசியா, பிலிப்பீன்சு, தைவான் மற்றும் தெற்கு ஜப்பான் வரை பரவலாகக் காணப்படுகின்றது.[2]
அடிமட்ட உயிரியான முரெக்சு திராப்பா, மணல் வாழ்விடங்களில் காணப்படுகிறது.
முரெக்சு ஓடு 50–124 மில்லிமீட்டர்கள் (2.0–4.9 அங்) நீளமும் 8–21 மில்லிமீட்டர்கள் (0.31–0.83 அங்) விட்டமும் கொண்டது.
நடுத்தர அளவில் இரு முனை ஒடுங்கிய அல்லது குவிந்த வடிவிலானவை. பெரிய முள்ளுடன் சுழல் முகடுகளைக் கொண்டது. ஓட்டின் மேற்பரப்பு பொதுவாக வெளிர் பழுப்பு அல்லது நீல-சாம்பல் நிறத்தில் முள்ளில் மஞ்சள்-பழுப்பு நிறமுடையனவாக இருக்கும். உடலில் சுழல், மூன்று சுழல் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. விழிவில்லைத் துளை, வெண்ணிற உட்புற விளிம்புடன் ஆழ்ந்த சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். வெளிப்புற உதட்டுத் துளை கிரானுலேட்டட்ம் ஆகும். சிபோலால் கால்வாய் நேராகவும் மிதமான நீளமானது (சுமார் 13–47 மிமீ) மூன்று முதல் நான்கு குறுகிய முள்ளெலும்புகள் சைபோனல் கால்வாயின் அடிப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.[3]
அரிய-முள்ளெலும்பு முரெக்சு சுறுசுறுப்பாக வேட்டையாடும் விலங்காகும். இவை முக்கியமாக மற்ற மெல்லுடலிகள் மற்றும் சுருள்காலிகளை உணவாக உண்ணுகிறது.