a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்க விளையாட்டில் முற்காப்பு (prophylaxis) என்ற சொல்லாட்சி, வருமுன் காப்போம் என்ற பொருளிலேயே பயன்படுகிறது. முற்காப்பு என்பது சதுரங்க விளையாட்டில் பொதுவாகப் பயன்படும் ஒரு சதுரங்க உத்தியாகும். இவ்வுத்தியை 1920 ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் ஆரோன் நிம்சோவிச்சு தன்னுடைய ”என் திட்டங்கள்” என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்[1]. எதிரியின் திட்டங்களை குலைப்பதற்கு ஒரு வீரர் எடுக்கும் நடவடிக்கைகளை குறிப்பதாக இச்சொல் பொருள் கொள்ளப்படுகிறது. இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஒருவீரர் நகர்த்துகின்ற நகர்வுகள் முற்காப்பு நகர்வுகள் எனப்படுகின்றன.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
முற்காப்பு நகர்வுக்கு ஒரு எளிய உதாரணமாக இதைக் கூறலாம். ஒரு வீரர் தன்னுடைய யானையின் சிப்பாயை h3 அல்லது h6 கட்டத்திற்கு நகர்த்துகிறார். சிப்பாயின் இந்நகர்வு, பின்வரிசையில் முற்றுகை நிகழ்ந்துவிடாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் g4 அல்லது g5 கட்டத்தில் எதிரியின் அமைச்சர் அல்லது குதிரை உட்காருவதை தடுப்பதாகவும் உள்ளது. இவ்விடத்தில் முற்றுகை என்பதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அவசியமானதல்ல என்றாலும் இன்றும் உலக சதுரங்கச் சாம்பியன் அனத்தோலி கார்ப்பொவ் h3 நகர்வை ஆடிக்கொண்டுதான் உள்ளார்.
மற்ற உதாரணங்கள் மிகவும் நுட்பமானவையாக உள்ளன. அநேகமாக சாத்தியமாகும் நகர்வுகள் என்றுகூட நினைக்க முடியாத அளவிற்கு நுட்பமான நகர்வுகளாக அவை உள்ளன. இரண்டாவது உதாரணத்தில் நிம்சோவிச்சு தானே கருப்பு காய்களுடன் ஆடுகிறார். பொதுவாக அவர் தன்னுடைய சிப்பாயை முன்நகர்த்தி எதிரியில்லா சிப்பாயாக மாற்றிவிட நினைக்கிறார். அதற்காக நேரடியாக ...e5 என்று விளையாடுவதும் வெற்றியைத் தராது. ஏனெனில் கருப்பு அரசர் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவார்.
1.... e5
2.fxe5 fxe5
3.g4+ hxg4
4.hxg4+ Ke6
5.Rd6+ கருப்பு அரசர் உபயோகமில்லாத பின் கட்டத்திற்கு சென்றுவிடுகிறார்.
இதனால், நிம்சோவிச்சு வேறு ஒரு மாற்று வழியில் விளையாடுகிறார்.
1.... Rf8!
2.Be1 g5!
3.fxg5 fxg5
4.g4+ hxg4
5.hxg4+ Ke5+ வெள்ளை யானையைக் கைப்பற்றுகிறார்.
இதைத் தடுக்கவே வெள்ளை முற்காப்பு நகர்வை செய்ய வேண்டியுள்ளது.:
அதாவது 2.Kg1.
இந்த நகர்வினால் சிலநகர்வுகளுக்குப் பின்னர் ஏற்படும் வெளிப்படும் முற்றுகையை தவிர்க்க முடியும். நிம்சோவிச்சுவின் எதிரியால் இதை எதிர்பார்க்க முடியவில்லை. அதனால் கருப்பு வெற்றி அடைகிறார். முற்காப்பு நகர்வு விழிப்புணர்வால் வெற்றியும் கிடைக்கலாம் அந்நகர்வு பற்றிய அறியாமையினால் தோல்வியும் விளையலாம் என்பதற்கு பொருத்தமான ஆட்டமாக இந்த ஆட்டம் விளங்குகிறது.