முல்லப்புடி வெங்கட ரமணா | |
---|---|
![]() நகரத் தந்தை சப்பம் அரி (இடது) ராசலட்சுமி விருதினை முல்லப்புடிக்கு (மையம்) வழங்குகிறார், 1995 | |
பிறப்பு | 28 June 1931 ராஜமன்றி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், India) |
இறப்பு | 24 பெப்ரவரி 2011 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 79)
தொழில் | எழுத்தாளர் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1960-2011 |
முல்லப்புடி வெங்கட ரமணா (Mullapudi Venkata Ramana) (28 ஜூன் 1931 - 24 பிப்ரவரி 2011) தெலுங்கு மொழியில் தனது பணிக்காக அறியப்பட்ட ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவரது நகைச்சுவை மற்றும் உருவகமான எழுத்து நடைக்கு பெயர் பெற்ற முல்லப்புடி, தெலுங்குத் திரையுலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 1986 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து ரகுபதி வெங்கய்யா பெயரில் நிறுவப்பட்ட விருதைப் பெற்றார். மேலும் இவர் ஆறு நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.[1]
முல்லப்புடி, இயக்குநர் சத்திராசு லட்சுமி நாராயணா என்கிற பாபுவுடனான தொடர்புக்காக குறிப்பிடத்தக்கவர். இவர்கள் இருவரும் பாபு-ரமணாவாக இணைந்து பணியாற்றினர். இயக்குநர்-எழுத்தாளர்களான இந்த இணை பங்காரு பிச்சிகா (1968), அந்தால ராமுடு (1973), சம்பூர்ண ராமாயணம் (1973), முத்தியால முக்கு (1975), பெல்லி புத்தகம் (1993), மிஸ்டர் பெல்லம் (1995) ,ராதா கோபாலம் (2005) போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர். இவர் ஒரு கட்டுரையாளர் மற்றும் கேலிச்சித்திர வரைஞர் ஆவார். இவர் தெலுங்கு சிறுவர் இலக்கியத்தின் மூலக்கல்லாகக் கருதப்படும் புதுகு என்ற பாத்திரத்தை உருவாக்கியதில் பெயர் பெற்றவர்.[2]
முல்லப்புடி வெங்கட ரமணா நடுத்தர வர்க்க பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். மேலும், இவரது குழந்தைப் பருவம் பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமன்றிக்கு அருகிலுள்ள தவுலேசுவரம் என்ற சிறிய கிராமத்தில் கழிந்தது. முல்லப்புடிக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருந்தனர். முல்லைப்புடிக்கு 9 வயதாக இருந்தபோது இவரது தந்தை காலமானார்.[3] இது இவர்களின் நிலையை தலைகீழாக மாற்றியது. இவர்கள் நல்ல வாய்ப்புகளுக்காக சென்னைக்கு மாறினார்கள். இவரது கல்வியும் தொழில் வாழ்க்கையும் சென்னையில் ஆரம்பித்தது. படிக்கும் நாட்களில், தெலுங்கு இலக்கியத்தின் மீது நாட்டம் காட்டினார் . மேலும், குறுகிய, பயனுள்ள கதைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.
இதே காலகட்டத்தில், பாபு இவருக்கு ஒரு நல்ல நண்பராக அமைந்தார். முல்லப்புடி எழுதுவதில் சிறந்தவர், அதே சமயம் பாபு ஓவியம் மற்றும் கேலிச்சித்திரம் வரைவதில் சிறந்தவர். விரைவில் இவர்கள் தங்கள் திறமைகளில் சிறந்து விளங்கினர். பின்னர், தங்களின் வாழ்க்கையில் மிகவும் போற்றத்தக்க சில தெலுங்கு படங்களை கொடுத்தனர்.
சென்னையில் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, 1953 இல் அப்போதைய பிரபலமான செய்தித்தாளான ஆந்திரா பத்ரிகாவில் நிருபராகத் தொடங்குவதற்கு முன்பு முல்லப்புடி பல சிறு சிறு பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது [4] அதே நாளிதழில் பணியாற்றிய நந்தூரி ராமமோகன ராவ், பில்லக கணபதி சாத்திரி, சூரம்புடி சீதாராம் போன்ற தெலுங்கு இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் உரையாடும் வாய்ப்பையும் பெற்றார்.[5] This translation used Bapu's illustrations for each translated verse.[5]
வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவைய தெலுங்கில் மேலுபலுக்குல மெலுகொலுப்பு என்று மொழிபெயர்த்தார்.[5] இந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு மொழிபெயர்க்கப்பட்ட வசனத்திற்கும் பாபுவின் விளக்கப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.[5]