உஸ்தாத் முஷ்டாக் உசேன் கான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | ஷேர்-இ-மௌஷிகி |
பிறப்பு | 1878 சஹாஸ்வான், இந்தியா |
பிறப்பிடம் | சஹாஸ்வான், பதாவுன் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | ஆகத்து 13, 1964 தில்லி, இந்தியா | (அகவை 85–86)
இசை வடிவங்கள் | இந்தியப் பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1896—1964 |
வெளியீட்டு நிறுவனங்கள் | சரிகம |
உஸ்தாத் முஷ்டாக் உசேன் கான் (Mushtaq Hussain Khan) (1878-1964) ஓர் இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகராவார். இவர் இராம்பூர்-சஹாஸ்வான் கரானாவைச் (இசைப் பயிற்சிப் பள்ளி) சேர்ந்தவர்.
உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் சஹாஸ்வான் என்ற ஒரு சிறிய நகரத்தில் பாரம்பரிய இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் முஷ்டாக் உசேன் பிறந்தார்.
இவரது பத்து வயதிலேயே இசையை இவரது தந்தை உஸ்தாத் கல்லன் கான், இவருக்கு இசைப் பயிற்சியை அளிக்கத் தொடங்கினார். தனக்கு பன்னிரண்டு வயதாக இருந்தபோது உஸ்தாத் ஐதர் கானின் சீடராகி அவருடன் நேபாளத்தின் காட்மாண்டுக்குச் சென்றார். பின்னர் இறுதியாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இராம்பூர்-சஹாஸ்வான் கரானாவின் நிறுவனர் உஸ்தாத் இனாயத் உசேன் கானின் கீழ் பயிற்சி பெறத் தொடங்கினார் .
தனது நீண்ட தொழில் வாழ்க்கையில், பாரத ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷி, பத்ம பூசண் திருமதி சானோ குரானா இவரது மருமகன் பத்மசிறீ உஸ்தாத் குலாம் சாதிக் கான், பத்மசிறீரீ திருமதி.நைனா தேவி, திருமதி. சுலோச்சனா பிரஹஸ்பதி, பத்மசிறீ திருமதி. சுமதி முத்தட்கர், உஸ்தாத் அப்சல் உசேன் கான் நிசாமி, அத்துடன் தனது சொந்த மகன்கள் உட்பட பல சீடர்களுக்கு இவர் பயிற்சி அளித்தார்.
சிறப்பான கலைஞர்களை கௌரவிக்க முடிவு செய்த இந்திய அரசு 1952 இல் முதன்முதலாக இவருக்கு குடியரசுத் தலைவர் விருதை வழங்கியது.[1] இவர் 1956ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்ற முதல் இந்தியரும் ஆவார். இராம்பூர் இசைப்பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், அடுத்த ஆண்டு புதுதில்லியிலுள்ள ஸ்ரீராம் பாரதியக் கலா கேந்திரத்தில் சேர்ந்தார். 1957இல் பத்ம பூசண் விருதினைப் பெற்ற முதல் இந்தியப் பாடகரானார்.
முஷ்டாக் உசேனின் கடைசி இசை நிகழ்ச்சி பாடகி நைனா தேவியின் இல்லத்தில் நடைபெற்றது. அங்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பழைய தில்லியிலுள்ள இர்வின் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு இவர் வந்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. [5] இவர் ஆகஸ்ட் 13, 1964 அன்று இறந்தார்.