இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
வகை | சுயநிதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1985[1] |
முதல்வர் | ஆர். இளங்கோவன் |
அமைவிடம் | களமாவூர், புதுக்கோட்டை தமிழ்நாடு |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.mookambigai.ac.in |
மூகாம்பிகை பொறியியல் கல்லூரி (Mookambigai College of Engineering) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூரில் அரசு அங்கீகாரம் பெற்று[சான்று தேவை] நாற்பது[சான்று தேவை] ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு சுயநிதிப் பொறியியல் கல்லூரி.[2] இது புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றுச் செயல்படுகிறது.
1985-ஆம் ஆண்டு அருள்மிகு மாரியம்மன் கல்வி, சுகாதார மற்றும் அறக்கட்டளையின் கீழ் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைமையகம் திருச்சி உறையூரில் உள்ளது. இக்கல்லூரியில் குடிசார் பொறியியல், இயந்திரப் பொறியியல், மின்னணுப் பொறியியல், மின்பொறியியல், மின்னணுவியல் மற்றும் அளவீட்டுகருவிப் பொறியியல், கணினியிய பொறியியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழி) உள்ளிட்ட துறைகள் செயல்பட்டுவருகின்றன. ஒரு ஆண்டில் ஐந்நூறு (500) மாணவர்கள் பயிலும் இக்கல்லூரி 200 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.