இராட்டிரகூடர் மன்னர்கள் (753-982) | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||
மூன்றாம் இந்திரன் (ஆட்சிக்காலம் 914-929 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான் இவன் இவனுக்கு முன்னிருந்த மன்னனான இரண்டாம் கிருட்டிணனின் பேரனும், செடி இளவரசி இலட்சுமியின் மகனும் ஆவான். இவன் தந்தை ஜகதுங்கன் முன்பே இறந்துவிட்ட காரணத்தால் இவன் மன்னனாக ஆனான். [1] இவனுக்கு நித்தியவர்சா, ரட்டகண்டரப்பா, ராஜமார்தாண்டா, கீர்த்திநாராயணன் போன்ற பட்டங்கள் இருந்தன. இவன் கன்னடக் கவிஞரும் தளபதியுமான ஸ்ரீவிஜய மற்றும் சமஸ்கிருத கவிஞர் திரிவிக்கரமா ஆகியோரை ஆதரித்தான். மூன்றாம் இந்திரன் மூன்றாம் மத்திய இந்தியாவின் காளச்சூரிய மரபின் இளவரசியான விஜம்பாவைத் திருமணம் செய்துகொண்டான்.