மூன்று புள்ளி நண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Portunus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PortunusP. sanguinolentus
|
இருசொற் பெயரீடு | |
Portunus sanguinolentus (Herbst, 1783) | |
வேறு பெயர்கள் | |
|
மூன்று புள்ளி நண்டு, முக்கண் நண்டு, கண் நண்டு (Portunus sanguinolentus, the three-spot swimming crab , blood-spotted swimming crab or red-spotted swimming crab [1] என்பது இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் நாடுகளின் கழிமுகப் பகுதிகளில் காணப்படும் ஒரு பெரிய நண்டு ஆகும்.
இந்த நண்டுகள் செங்கடல் வழியாக பாரசீக வளைகுடா, மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, மடகாசுகர், மொரிசியசு, பாக்கித்தான், இந்தியா, மாலைத்தீவுகள், இலங்கை, அந்தமான் தீவுகள், மியான்மர், மலாய் தீபகற்பம், தாய்லாந்து, யப்பான், கொரியா, தைவான், சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பீன்சு, ஜாவா, ஆத்திரேலியா, ஹவாய் போன்று உலகின் அனைத்து முக்கிய கடல் பகுதிகளிலும் பரவலாக பரவியுள்ள ஒரு இனம். [2]
இதில் இரண்டு கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [3]
இவை அதிகபட்சம் 15-20 செமீ நீளம் கொண்டவை. பசுச் சாம்பல் நிறைத்திலான பெரிய ஓட்டைக் கொண்டது. இந்த ஓட்டில் சிவப்பு நிறத்தில் வெள்ளை விளிம்புகளுடன் மூன்று புள்ளிகள் காணப்படும். இதன் மூலமாக இதை எளிதில் அடையாளம் காண இயலும். இந்த நண்டு நீந்த உதவும் கால்கள் தட்டையாகவும் நகங்கள் நீளமாகவும் இருக்கும். [4]
இந்த நண்டு ஒரு கொன்றுண்ணி ஆகும். சிறு கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று உண்ணும். கடலடி மணலிலிலும் சேற்றிலும் இது வாழ்கிறது. இது ஒரு ஆபத்தற்ற நண்டு, ஆனால் இதன் கடியானது வலியை ஏற்படுத்தும்.[சொந்தக் கருத்து?] ]
உண்ணத்தக்க இனமான இது வணிக ரீதியாக பல நாடுகளில் பிடிக்கப்படுகிறது. [5]