மூன்று முடிச்சு | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் ஆர். எம். சுப்பைய்யா ஆர். எம். எஸ். புரொடக்ஷன்ஸ் |
கதை | கே. விஸ்வநாத் |
திரைக்கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர் கிட்டு |
வெளியீடு | அக்டோபர் 22, 1976 |
நீளம் | 3862 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூன்று முடிச்சு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படமானது 1974 ஆம் ஆண்டில் கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் எடுக்கப்பட்ட 'ஓ சீத கதா' திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும். மலையாள மொழியிலும் பி. பாஸ்கரன் இயக்கத்தில் 'மாட்டாரு சீதா' எனும் பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் 1975யில் அதே திரைக்கதை மீண்டும் படமாக்கப்பட்டது. இரு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து 1976 ஆண்டில் கே. பாலச்சந்தர் தமிழ் மொழியிலும் படமாக்கினர். மலையாளத்தில் கமல் வில்லனாக நடித்த அதே கதாபாத்திரத்தில் தமிழில் ரஜினி நடித்துள்ளார்.[1]
பாலசந்தர் இப்படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் முதலில் ஜெயபாரதி நடிக்கவைக்க நினைத்திருந்தார். ஆனால் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை படங்களை இயக்கலாம் என்று இருக்கிறேன் என ஜெயபாரதி மறுத்துவிட்டார்.[2] இப்படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் கமல்ஹாசன் வீட்டில் எடுக்கப்பட்டது.[3]
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன் அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:வி) |
---|---|---|---|
1 | ஆடி வெள்ளி | பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் | 03:46 |
2 | நானொறு கதாநாயகி | பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி |
03:07 |
3 | வசந்த கால | பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எம். எஸ். விஸ்வநாதன் |
03:20 |
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)