Moolakadai Junction | |
---|---|
மூலக்கடை சந்திப்பு | |
அமைவிடம் | |
சென்னை, இந்தியா | |
ஆள்கூறுகள்: | 13°07′44″N 80°14′29″E / 13.128937°N 80.241453°E |
சந்தியில் உள்ள சாலைகள்: | பெரும் வடக்குப் பெருவழிச் சாலை (NH 5) மாதவரம் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை காமராசர் சாலை |
கட்டுமானம் | |
வகை: | மேம்பாலம் |
வழித்தடங்கள்: | 4 |
திறக்கப்பட்டது: | நவம்பர் 13, 2015 |
பராமரிப்பு: | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் |
மூலக்கடை சந்திப்பு (Moolakadai Junction) என்பது இந்திய நாட்டின் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான சாலை சந்திப்பு ஆகும். பிரமாண்டமான வடக்குப் பெருவழி சாலை (தேசிய நெடுஞ்சாலை 5), மாதவரம் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, காமராசர் சாலை போன்ற சாலைகள் சந்திக்கும் மூலக்கடையில் இச்சந்திப்பு அமைந்துள்ளது.
வடசென்னையில் அதிகமான போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக இச்சந்திப்பு விளங்குகிறது. ஏனெனில் கனரக வாகனங்கள் (பெரும்பாலும் கொள்கலன் வாகனங்கள்) இவ்வழியாகத்தான் பயணம் செய்து சென்னை துறைமுகத்தை அடைய வேண்டியிருக்கிறது. தென் சென்னையிலிருந்து மாதவரம், கொடுங்கையூர், மாதவரம் பால் பண்ணை, மாத்தூர் மணலி, வியாசர்பாடி, புழல், செங்குன்றம் மற்றும் காரணோடை பகுதிகளுக்கு வருபவர்களுக்கு மூலக்கடைதான் நுழைவு வாயிலாக இருக்கிறது.
சனவரி மாதம் 2011 ஆம் ஆண்டில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.[1]
தேர்தல், நிலம் கையகப்படுத்தல்[2] போன்ற செயல்பாடுகளால் சாலைப்பணி முன்னேற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி[3] மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
மூன்று மாதத்திற்குள் இச்சாலையை பொதுப் பயன்பாட்டுப் போக்குவரத்திற்காக திறந்து விடவேண்டும் என 2015 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.[4]
இதன் விளைவாக, 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 இல் மூலக்கடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது[5][6][7]