மூழிக்குளம் கொச்சுகுட்டன் சாக்கியர் | |
---|---|
பிறப்பு | 1928 அம்மனூர், திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா |
இறப்பு | 2009 |
பணி | கூடியாட்டக் கலைஞர் |
அறியப்படுவது | கூடியாட்டம் |
பிள்ளைகள் | மார்கி மது மார்கி சஜீவ் நாராயண சாக்கியர் |
விருதுகள் | பத்மசிறீ |
மூழிக்குளம் கொச்சுகுட்டன் சாக்கியர் (Moozhikkulam Kochukuttan Chakyar )(1928-2009) இவர் கேரளாவிலிருந்து வந்த சமசுகிருத பாரம்பரிய நாடக வடிவமான, கூடியாட்டத்தின் ஒரு நிபுணராவார்.[1] கூடியாட்டம் என்பது யுனெஸ்கோவால் மனிதகுலத்தின் வாய்வழி, புலனக பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . [2]
1928 ஆம் ஆண்டில், தென்னிந்திய மாநிலமான கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், இரிஞ்ஞாலகுடாவுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய குக்கிராமமான அம்மனூரில், கூடியாட்டக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்பத்தினரிடமிருந்து கலை வடிவத்தில் தனது ஆரம்பகால பயிற்சியைப் பெற்றார். புகழ்பெற்ற கூடியாட்டக் கலைஞரும், பத்ம பூசண் விருது பெற்றவருமான அம்மனூர் மாதவ சாக்கியர் இவரது உறவினர் ஆவார். பின்னர் இருவரும், புதிய பள்ளியை உருவாக்கினர். இது 'கூடியாட்டத்தின் அம்மனூர் பாரம்பரியம்' என்று பிரபலமாக அறியப்படுகிறது. [3]
கேரளாவின் பாரம்பரிய கலை வடிவங்களை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனமான மார்கி, 1981ஆம் ஆண்டில் அவர்களின் கூடியாட்டப் பயிற்சி மையத்தைத் தொடங்கியபோது, இவர் அதன் முதல் குருவாக ஆனார்.[4] இந்த நிறுவனம் பல ஆர்வமுள்ள கலைஞர்களுக்கு பயிற்சியளித்தது. [5] [6]
சாக்கியருக்கு, மார்கி சஜீவ் நாராயண சாக்கியர் [7] மற்றும் மார்கி மது [8] என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கலை வடிவத்தின் வெளிப்பாட்டாளர்களாக இருக்கின்றனர்.
1998 ஆம் ஆண்டில், இவர் கூடியாட்டத்தில் சிறந்து விளங்கும் மையமான நேபாதியாவில் தலைமை ஆசிரியரகச் சேர்ந்தார். மேலும் அந்த நிறுவனத்துடன் கடைசி வரை தொடர்பு வைத்திருந்தார். [9] 2008 ஆம் ஆண்டில், நான்காவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்மசிறீ விருதினை இந்திய அரசு இவருக்கு வழங்கியது. [10] இவர், 2009 இல் தனது 81 வயதில் இறந்தார். நேபாதியாவை தலைமையிடமாகக் கொண்ட கொச்சியின் புறநகர்ப் பகுதியான மூழிக்குளத்தில், [11] நேபாதியா ஏற்பாடு செய்த சொற்பொழிவுகள் மூலம், குரு மூழிக்குளம் கொச்சுகுட்டன் சாக்யர் நினைவு கூடியாட்ட விழா என்ற வருடாந்திர திருவிழாவால் இவர் நினைவுகூரப்பட்டார்.[12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)