மூழ்கிய கண்டம் (submerged continent) பெரும்பாலும் கடலுக்கடியில் மூழ்கியுள்ள பேரளவிலான பெருநிலப் பகுதி ஆகும். சில நிலப் பகுதிகளைக் குறித்து இத்தகைய சொற்பயன்பாட்டை சில தொன்மவியல் நிலவியலாளர்களும் புவியியலாளர்களும் பாவிக்கின்றனர்.
இத்தகைய மூழ்கிய கண்டங்களுக்கு இரு காட்டுகளாக கேர்கைலன் பீடபூமியும் சிலாந்தியாவும் உள்ளன.
அத்திலாந்திக்குப் பெருங்கடலில் நீரின் கீழ் மூழ்கியுள்ள "தொலைந்த கண்டத்தை" குறித்த அனுமானங்களும் தேடுதல்களும் இருந்து வந்துள்ளன.[1][2] 1930களில் இந்திய, ஆப்பிரிக்க கடல்களுக்கு இடையே மூழ்கிய கண்டமாகக் கருதப்படும் இலெமூரியாவைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[3]