மூவார் (P146) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Muar (P146) Federal Constituency in Johor | |
மூவார் மக்களவைத் தொகுதி (P146 Muar) | |
மாவட்டம் | மூவார் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 68,925 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | மூவார் தொகுதி |
முக்கிய நகரங்கள் | மூவார்; பண்டார் மகாராணி; |
பரப்பளவு | 268 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | மூடா |
மக்களவை உறுப்பினர் | சையது சாதிக் (Syed Saddiq Syed Abdul Rahman) |
மக்கள் தொகை | 100,265 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
மூவார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Muar; ஆங்கிலம்: Muar Federal Constituency; சீனம்: 麻坡国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மூவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P146) ஆகும்.[5]
மூவார் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து மூவார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மூவார் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். மூவார் மாவட்டம் முன்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மூவார் அல்லது பண்டார் மகாராணி என்பது மற்றொரு பிரிவு. லேடாங் எனும் தங்காக் என்பது மற்றொரு பிரிவு.
மூவார் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 150 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 143 கி.மீ.; மலாக்கா மாநகரில் இருந்து 47 கி.மீ.; சிங்கப்பூரில் இருந்து 179 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மூவார் மாவட்டம், சிங்கப்பூரைப் போல இரண்டரை மடங்கு பெரிய நிலப்பகுதியைக் கொண்டது.
இந்த மாவட்டத்திற்கு மூவார் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. மலாக்கா நீரிணையின் கரையோரத்தில்; மூவார் ஆற்றின் முகப்பில் மூவார் நகரம் அமைந்து உள்ளது.
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
மூவார் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P106 | 1974–1978 | நியோ இயீ பான் (Neo Yee Pan) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P123 | 1986–1990 | முகமட் சாம் சய்லான் (Mohamed Sam Sailan) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | அப்துல் மாலிக் முனிப் (Abdul Malek Munip) | ||
9-ஆவது மக்களவை | P133 | 1995–1999 | அப்துல் அசீஸ் முகமட் யாசின் (Abdul Aziz Mohd. Yassin) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | ரோபியா கோசாய் (Robia Kosai) | ||
11-ஆவது மக்களவை | P146 | 2004–2008 | ரசாலி இப்ராகிம் (Razali Ibrahim) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | சையது சாதிக் (Syed Saddiq Syed Abdul Rahman) |
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |
2020 | பெர்சத்து | |||
2021 | சுயேச்சை | |||
2021–2022 | மூடா | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சையது சாதிக் (Syed Saddiq Syed Abdul Rahman) | மூடா | 19,961 | 37.55 | 37.55 | |
அப்துல்லா உசேன் (Abdullah Husin) | பெரிக்காத்தான் நேசனல் | 18,616 | 35.02 | 35.02 | |
முகமட் எல்மி அப்துல் லத்தீப் (Mohd Helmy Abd Latiff) | பாரிசான் நேசனல் | 14,581 | 27.43 | 9.14 ▼ | |
மொத்தம் | 53,158 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 53,158 | 99.00 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 537 | 1.00 | |||
மொத்த வாக்குகள் | 53,695 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 68,925 | 77.12 | 6.90 ▼ | ||
மூடா கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)