மெக்சிக்கோ உச்சநீதிமன்றம் | |
---|---|
நிறுவப்பட்டது | 1825 |
அமைவிடம் | மெக்சிக்கோ நகரம் |
அதிகாரமளிப்பு | மெக்சிக்கோ அரசியலமைப்புச் சட்டம் |
இருக்கைகள் எண்ணிக்கை | 11 |
வலைத்தளம் | https://www.scjn.gob.mx/ |
தற்போதைய | அர்துரோ சால்டவர் லெலோ டி லாரியா |
மெக்சிக்கோ உச்ச நீதிமன்றம் (Supreme Court of Justice of the Nation) மெக்சிக்கோ நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட ஓர் உச்ச நீதிமன்றமாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மெக்சிக்கோ நகரத்தில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் குற்றவியல் நடுவர்களாக பணிபுரிகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 15 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் [1]. குடியரசின் குடியரசுத் தலைவரால் முன்மொழியப்பட்ட பட்டியலிலிருந்து மேல்சட்டசபை உறுதிப்படுத்தியதன் மூலம் அவை அங்கீகரிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் தங்களில் இருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு நீதிமன்றத்தின் தலைவராக இருக்கப் போகின்றவரை தேர்ந்தெடுப்பார்கள். எந்தவொரு நீதிபதியும் ஒன்றுக்கு மேற்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு பதவியை வகிக்கலாம், ஆனால் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நான்கு ஆண்டுகள் அவ்வாறு இருக்க முடியாது.