நிறுவுகை | 1845 |
---|---|
தலைமையகம் | சென்னை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தென்னிந்தியா |
தொழில்துறை | இரயில்வே |
சேவைகள் | இருப்புப்பாதை |
மெட்ராசு இரயில்வே (முழு பெயர் மெட்ராசு இரயில்வே நிறுவனம்,Madras Railway Company) என்பது தென்னிந்தியாவில் இரயில்வேவை வளர்த்ததில் பெரும் பங்காற்றிய நிறுவனம் ஆகும். 1908 ஆம் ஆண்டு தெற்கு மராட்டா இரயில்வேயுடன் இணைக்கப்பட்டு மெட்ராசு மற்றும் தெற்கு மராட்டா இரயில்வே என உருபெற்றது.
மெட்ராசு ரயில்வே 1845 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் இரயில்பாதை ராயபுரம் முதல் ஆற்காடு வரை 1856 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னையை மேற்கு கடற்கரையுடன் இணைப்பதையும், பெங்களூர், நீலகிரி ஆகியவற்றை மெட்ராசுடன் இணைத்து அப்பாதையை மும்பையுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.[1][2] [3][4]