மெட்ராஸ் பள்ளிக்கூடம் (Madras School) இந்தியாவின் மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்ட சென்னை மாகாணத்தில், 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் (1808), நடுநிலைப் பள்ளிக்கூடங்களில் (Middle School) மூத்த மாணவர்கள், இளைய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை ஆகும். இந்தியாவின் மெட்ராஸ் மாகாணத்திற்கு வருகை தந்த ஆண்ட்ரூ பெல் எனும் கல்வியாளர், இப்பள்ளிக் கல்வி முறையை ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்த பரிந்துரை செய்தார்.[1]