மென்லோ பூங்கா, நியூ ஜெர்சி | |
---|---|
ஆள்கூறுகள்: 40°33′54″N 74°20′15″W / 40.56500°N 74.33750°W | |
Country | ஐக்கிய அமெரிக்கா |
State | நியூ செர்சி |
County | மிடில்செக்ஸ் |
Township | எடிசன் |
ஏற்றம் | 141 ft (43 m) |
மென்லோ பார்க் என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மிடில்செக்சு மாவட்டத்தின் எடிசன் நகரியத்தில் (Edison Township) உள்ள ஓர் ஒருங்கிணைக்கப்படாத சமூகம் ஆகும் (Unincorporated community). [1] [2]
1876 ஆம் ஆண்டில், தாமஸ் எடிசன் மென்லோ பூங்காவில் தனது வீடு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகத்தை அமைத்தார். வளர்ச்சியடையாத இந்த வீட்டுமனை பகுதிக்கு, கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பூங்காவின் பெயர் சூட்டப்பட்டது. [3] அங்கு வாழ்ந்த போது, எடிசன் "மென்லோ பூங்காவின் வழிகாட்டி" என்ற புனைப்பெயரைப் பெற்றார். [4] வணிகப்பயன்பாட்டிற்கான ஆய்வு நடைமுறைகளை மேற்கொண்ட முன்னோடி ஆய்வகங்களில் மென்லோ பூங்காவும் ஒன்றாக இருந்தது. [5] இந்த மென்லோ பூங்கா ஆய்வகத்தில் தான் தாமஸ் எடிசன் ஒலிப்பதிவு செய்யும் கருவியை (ஆங்கிலம்: Phonograph) கண்டுபிடித்தார். வணிக ரீதியாக செய்யத்தக்க ஒளிரும் விளக்கு இழையை (ஆங்கிலம்: Incandescent light bulb filament) உருவாக்கினார். மென்லோ பூங்காவில் உள்ள கிறிஸ்டி தெரு (ஆங்கிலம்: Christie Street), வெளிச்சத்திற்காக மின்சார விளக்குகளைப் பயன்படுத்திய உலகின் முதல் தெருக்களில் ஒன்றாகும். [6] எடிசன் மென்லோ பூங்காவை விட்டு வெளியேறி தனது வீட்டையும் ஆய்வகத்தையும் 1887 ஆம் ஆண்டு நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள [7] வெஸ்ட் ஆரஞ்சுக்கு (West Orange) நகரியத்திற்கு மாற்றினார். அவரது மரணத்திற்குப் பிறகு, தாமஸ் ஆல்வா எடிசன் நினைவுக் கோபுரம் மற்றும் அருங்காட்சியகம் (ஆங்கிலம்: Thomas Alva Edison Memorial Tower and Museum) அவரது பழைய மென்லோ பார்க் ஆய்வகத்திற்கு அருகில் கட்டப்பட்டது. 1938 ஆம் ஆண்டில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. எடிசனின் பழைய ஆய்வக தளமும் நினைவுச்சின்னமும் இப்போது எடிசன் மாநில பூங்கா (ஆங்கிலம்: Edison State Park) என்று பெயரிடப்பட்டுள்ளன. [8] அவர் உயிருடன் இருந்தபோது, "ரேரிடன் நகரியம்" (ஆங்கிலம்: Raritan Township) என்று அழைக்கப்பட்ட (மென்லோ பூங்கா அமைந்துள்ள) நகராட்சி பகுதி (Municipality region), தாமஸ் எடிசனின் நினைவாக நவம்பர் 10, 1954 ஆம் தேதி முதல் எடிசன் நகரியம் என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்பட்டது. [9]