பிராங்-மை-தாம் அல்லது சுருக்கமாக மைதாம் (Maidam; பொருள்: இடுகாடு) என்பது அகோம் சமயத்தின் பாரம்பரிய துமுலஸ் (கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு) ஆகும்.[1] சாரெய்டியோவின் அரச மைதாம்கள் யுனெஸ்கோஉலக பாரம்பரிய தளத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.[2] மைதாம்கள் பெரும்பாலும் பார்வோன்களின் எகிப்திய பிரமிடுகள் மற்றும் பண்டைய சீன அரசகுலத்தினரின் கல்லறைகளுடன் ஒப்பிடப்படுகின்றன.[3][4] இன்று, மோ-ஹங், மோ-சாம், சாடாங், மோ-பிலாங் ஆகிய நான்கு குல மக்கள் அகோம் சமயத்தின் கல்லறை பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். [1]