மெருதுங்கா (Merutunga) இந்தியாவின் இன்றைய குசராத்தைச் சேர்ந்த ஒரு இடைக்கால அறிஞரும் அஞ்சலா கச்சாவின் சுவேதாம்பரசைனத் துறவியும் ஆவார். பொ.ஊ.1306 - இயற்றப்பட்ட இவரது பிரபந்த சிந்தாமணி என்ற சமசுகிருத உரைக்காக இவர் தற்போது மிகவும் பிரபலமானவர்.[1][2] இவர் 1350-இல் சாவ்தா, சோலாங்கி மற்றும் வகேலா வம்சங்களின் காலவரிசையை விவரிக்கும் விசாரஸ்ரேணி என்ற நூலையும் எழுதினார். [3][4]
ஒரு வரலாற்றாசிரியராக, இவரது சமகாலத்தவர்களுடனும் நவீன வரலாற்றாசிரியர்களுடனும் ஒப்பிடுகையில், மெருதுங்காவின் படைப்புகள் பொதுவாக தரம் குறைந்ததாகக் கருதப்படுகிறது. [5][6] "மெருதுங்காவின் கதைகளில் தேதிகள் மிகவும் பலவீனமானவையாக உள்ளதாக" குசராத்தி வரலாற்றாசிரியர் கே. எம். முன்ஷி கூறுகிறார்.[7] மேலும், பிரித்தானிய இந்தியவியலாளர் ஏ.கே. வார்டர் மெருதுங்காவின் வரலாறுகளை "முற்றிலும் நம்பமுடியாதவை" என்றும் அவரது கதைகள் "அடிப்படையில் புனைகதை" என்றும் நிராகரிக்கிறார். [8]