மெருலினா

மெருலினா
மெருலினா ஆம்ப்லியாட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
கெக்சாகோராலியா
வரிசை:
இசுக்லராக்டினியா
குடும்பம்:
மெருலினிடே
பேரினம்:
மெருலினா

எக்ரென்பெர்க், 1834[1]
சிற்றினம்
உரையினை காண்க
வேறு பெயர்கள்
  • கிளாவரினா வெர்ரில், 1864
  • பாராகிளாவாரினா வெரோன், 1985

மெருலினா (Merulina) என்பது மெருலினிடே குடும்பத்தில் உள்ள பாறை பவளப்பாறைகளின் பேரினமாகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவை. இவை செங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாகச் சப்பான் மற்றும் தெற்கு மத்திய பசிபிக் பெருங்கடல் வரை காணப்படுகிறது.[2] மெருலினா ஆம்ப்லியாட்டா இப்பேரினத்தின் மாதிரி இனமாகும்.[1]

சிறப்பியல்புகள்

[தொகு]

இந்த கூட்டமைப்புகள் நீண்ட அடுக்கமைவு, இலைய, நெடுவரிசை அல்லது கிளைகளுடன் காணப்படலாம். மேலும் இந்த அனைத்து வடிவங்களும் ஒரே கூட்டமைப்பிலும் காணப்படலாம். அடுக்கமைவு தகடுகளில், மையம் ஒன்றிலிருந்து கிளைகள் பரவி, கிளை கட்டமைப்புகளில் சுருண்டு அமைகின்றன.[2]

சிற்றினங்கள்

[தொகு]

பின்வரும் சிற்றினங்கள் தற்போது கடல் உயிரினங்களின் உலகப் பதிவேட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1]

  • மெருலினா ஆம்ப்லியாட்டா (எல்லிசு & சோலண்டர், 1786)
  • மெருலினா இசுலெலி (முன், 1922)
  • மெருலினா ரோட்டுண்டா நெமென்சோ, 1959
  • மெருலினா இசுகாப்ரிகுலா டானா, 1846
  • மெருலினா இசுகீரி ஹெட், 1983
  • மெருலினா திரையாங்குலரிசு (வெரோன் & பிச்சான், 1980)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Hoeksema, Bert (2018). "Merulina Ehrenberg, 1834". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 2018-08-10.
  2. 2.0 2.1 Sprung, Julian (1999). Corals: A quick reference guide. Ricordea Publishing. pp. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-883693-09-8.