மெர்சிங் (P154) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Mersing (P154) Federal Constituency in Johor | |
மெர்சிங் மக்களவைத் தொகுதி (P154 Mersing) | |
மாவட்டம் | மெர்சிங் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 66,275 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | மெர்சிங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | மெர்சிங்; பாலோ; எண்டாவ்; ககாங் |
பரப்பளவு | 2,875 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் இசுலாவுதீன் அபாஸ் (Muhammad Islahuddin Abas) |
மக்கள் தொகை | 78,195 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
மெர்சிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Mersing; ஆங்கிலம்: Mersing Federal Constituency; சீனம்: 丰盛港国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மெர்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P154) ஆகும்.[5]
மெர்சிங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து மெர்சிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மெர்சிங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு மெர்சிங் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
மெர்சிங் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 355 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 127 கி.மீ.; பகாங், பெக்கான் அரச நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
தென் சீனக் கடலைக் கடற்கரையாகக் கொண்ட மெர்சிங் மாவட்டம் நிறைய சுற்றுலாத் தீவுகளைக் கொண்டது. இங்கு அழகு அழகான கடற்கரைகள்; குறைந்த விலையில் தங்கும் விடுதிகள்; தடங்கல் இல்லா படகுச் சேவைகள் உள்ளன. மேலும் பல்வகையான கடல்வகை உணவுப் பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன.[7]
மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
மெர்சிங் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P119 | 1986–1990 | அப்துல் அஜீப் அகமட் (Abdul Ajib Ahmad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P129 | 1995–1999 | சைனல் அபிடின் ஒசுமான் (Zainal Abidin Osman) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | அப்துல் லத்தீப் அகமட் (Abdul Latiff Ahmad) | ||
11-ஆவது மக்களவை | P154 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2019 | சுயேச்சை | |||
2019–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமட் இசுலாவுதீன் அபாஸ் (Muhammad Islahuddin Abas) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமட் இசுலாவுதீன் அபாஸ் (Muhammad Islahuddin Abas) | பெரிக்காத்தான் நேசனல் | 21,066 | 44.91 | 44.91 | |
அப்துல் லத்தீப் பான்டி (Abdul Latif Bandi) | பாரிசான் நேசனல் | 18,729 | 39.93 | 13.07 ▼ | |
பத்தின் சுலைகா சைடி (Fatin Zulaikha Zaidi) | பாக்காத்தான் அரப்பான் | 6,813 | 14.52 | 15.85 ▼ | |
நூர்பத்திமா இப்ராகிம் (Nurfatimah Ibrahim) | தாயக இயக்கம் | 209 | 0.45 | 0.45 | |
இசுமாயில் டோன் (Ismail Don) | சுயேச்சை | 89 | 0.19 | 0.19 | |
மொத்தம் | 46,906 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 46,906 | 98.81 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 563 | 1.19 | |||
மொத்த வாக்குகள் | 47,469 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 66,275 | 70.77 | 8.74 ▼ | ||
Majority | 2,337 | 4.98 | 17.65 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)