மெர்போக் (P014) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Merbok (P014) Federal Constituency in Kedah | |
கெடா மாநிலத்தில் மெர்போக் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கோலா மூடா மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | மெர்போக் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுங்கை பட்டாணி, சுங்கை லாலாங், பீடோங், குரூண், செமெலிங், மெர்போக், தஞ்சோங் டாவாய் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமது நசுரி அபு அசன் (Mohd Nazri Abu Hassan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 132,444[1][2] |
தொகுதி பரப்பளவு | 451 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
மெர்போக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Merbok; ஆங்கிலம்: Merbok Federal Constituency; சீனம்: 植联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P014) ஆகும்.[4]
மெர்போக் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1986-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதே 1986-ஆம் ஆண்டில் இருந்து மெர்போக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), மெர்போக் தொகுதி 40 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]
கோலா மூடா மாவட்டம் கெடா மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரீகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப் படுகிறது. மலேசியாவில் புகழ்பெற்ற ஜெராய் மலை இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூடா ஆறு இந்த மாவட்டத்தையும் பினாங்கு மாநிலத்தையும் பிரிக்கிறது.[6]
2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலைகளின் தாக்குதல்களினால் கோலா மூடா மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன.
சுங்கை மூடா (Sungai Muda) ஆறு, கெடா மாநிலத்தின் தென்பகுதியை இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. சுங்கை மூடா ஆற்றின் பெயரில் இருந்து தான் கோலா மூடா எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[7] சுங்கை மூடா ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில் கம்போங் சுங்கை மூடா, கோத்தா கோலா மூடா எனும் மீன்பிடி கிராமங்கள் உள்ளன.
மூடா ஆறு, மெர்போக் ஆறு (Sungai Merbok), சுங்கை மாஸ் (Sungai Mas) போன்ற ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மலாயாவின் பண்டைய கால நாகரிகங்கள் தோன்றி இருக்கலாம் எனும் கருத்து நிலவி வருகிறது.
மெர்போக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோலா மூடா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
7-ஆவது | 1986–1990 | டைம் சைனுடீன் (Daim Zainuddin) |
பாரிசான் (அம்னோ) |
8-ஆவது | 1990–1995 | ||
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | ||
11-ஆவது | 2004–2008 | சைனுடீன் மைடீன் (Zainuddin Maidin) | |
12-ஆவது | 2008–2013 | ரசீட் டின் (Rashid Din) |
பி.கே.ஆர் |
13-ஆவது | 2013–2018 | இசுமாயில் டாவுட் (Ismail Daut) |
பாரிசான் (அம்னோ) |
14-ஆவது | 2018–2022 | நோர் அசுரினா சுரிப் (Nor Azrina Surip) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
15-ஆவது | 2022 – தற்போது வரையில் | முகமது நசுரி அபு அசன் (Mohd Nazri Abu Hassan) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
132,444 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
103,799 | 80.51% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
102,544 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
208 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,027 | - |
பெரும்பான்மை (Majority) |
21,019 | 20.50% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | |
Source: Results of Parliamentary Constituencies of Kedah |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
முகமது நசுரி அபு அசன் (Mohd Nazri Abu Hassan) |
பெரிக்காத்தான் | 52,573 | 51.27% | +51.27 | |
நோர் அசுரினா சுரிப் (Nor Azrina Surip) |
பாக்காத்தான் | 31,554 | 30.77% | -12.54 ▼ | |
சைபுல் அசிசி சைனோல் ஆபிதீன் (Shaiful Hazizy Zainol Abidin) |
பாரிசான் | 16,691 | 16.28% | -12.91 ▼ | |
முகமது மொசின் அப்துல் ரசாக் (Mohd Mosin Abdul Razak) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 1,201 | 1.17% | +1.17 | |
கைருல் அனுவார் அகமட் (Khairul Anuar Ahmad) |
சபா பாரம்பரிய கட்சி | 525 | 0.51% | +0.51 |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N25 | புக்கிட் செலம்பாவ் (Bukit Selambau) |
சண்முகம் ரெங்கசாமி (Summugam Rengasamy) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
N26 | தஞ்சோங் டாவாய் (Tanjong Dawai) |
அனிப் கசாலி (Hanif Ghazali) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)