மெலனோபிடியம் பங்டேட்டம் | |
---|---|
பெடோம் கருப்பு கேடய வால் பாம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | குந்தர், 1864[2]
|
இனம்: | மெ. பங்டேட்டம்
|
இருசொற் பெயரீடு | |
மெலனோபிடியம் பங்டேட்டம் பெடோம், 1871 |
மெலனோபிடியம் பங்டேட்டம் என்பது பொதுவாக பெடோம் கருப்பு கேடய வால் பாம்பு அல்லது பெடோம் கரு மண் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு கேடய வால் பாம்பு ஆகும்.[1][3]
பெடோம் கருப்பு கேடய வால் பாம்பு வடக்கில் இராதாநகரி வனவிலங்கு சரணாலயத்திற்கும் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் (தமிழ்நாடு) இடையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.[1]
மூக்குத்தண்டு வட்டமானது, அலகுருமுளை சிறியது. கண் மிகவும் சிறியது. உடலின் விட்டம் மொத்த நீளத்தில் 42 முதல் 48 மடங்கு ஆகும். உடலின் நடுவில் 15 செதில்களும், தலைக்குப் பின்னால் 17 செதில்களும் காணப்படும். 184 முதல் 198 செதில்கள் வயிற்றுப்புறத்தில் அகன்றதாக உள்ளன. 15 முதல் 18 வாலடிச் செதில்கள் உள்ளன. கருப்பு நிறத்தில் ஒளிரும் வயிற்றுச் செதில்கள் இரண்டு வரிசையில் பரந்த வெள்ளை விளிம்புடன் காணப்படும்.[4]
வட்டார மாதிரி: திருவிதாங்கூர், முட்டி-குளி வயல், ஆசாம்பூ மலைத்தொடரில் ஒரு சிறிய பள்ளத்தாக்கு (4,500 அடி உயரம்)[3]