மெளவுரிசு குவயர் | |
---|---|
மெளவுரிசு குவயர் (வலது ஓரம்) | |
பிறப்பு | மெளவுரிசு லின்போர்டு குவயர் 25 ஏப்ரல் 1878 |
இறப்பு | 12 அக்டோபர் 1952 | (அகவை 74)
தேசியம் | பிரித்தானியர் |
சர் மெளவுரிசு லின்போர்ட் குவயர் (Maurice Gwyer)(25 ஏப்ரல் 1878 - 12 அக்டோபர் 1952) என்பவர் பிரித்தானிய வழக்கறிஞர், நீதிபதி மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் 1938 முதல் 1950 வரை தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 1937 முதல் 1943 வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். இந்தியாவின் தில்லியில் 1948-இல் மிராண்டா ஹவுஸ் என்ற கல்லூரியை நிறுவிய பெருமைக்குரியவர். குவயர் மண்டபம் எனும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பழமையான ஆண்கள் தங்குமிடம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டது.[1][2]
ஜான் எட்வர்ட் குவயர் மற்றும் எடித் குவயர் ஆகியோருக்கு மகனாக குவயர் பிறந்தார். இவருக்கு பார்பரா குவயர் என்ற சகோதரி இருந்தார். இவர் 1887 முதல் 1892 வரை ஹைகேட் பள்ளியில் படித்தார். பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளியில், ஆக்சுபோர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3] நவம்பர் 1902-இல் ஆக்சுபோர்டில் உள்ள ஆல் சோல்ஸ் கல்லூரியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் சிபி (1921), கே. சி. பி. (1928), கே. சி. எசு. ஐ. (1935), மற்றும் ஜி. சி. ஐ. ஈ. (1948) என நியமிக்கப்பட்டார். இவர் கிறிஸ்ட் சர்ச் (1937), ஆக்சுபோர்டின் கெளரவ டி. சி. எல். (1939), திருவிதாங்கூர்(1943) மற்றும் பாட்னாவின் எல். எல். டி. (1944) மற்றும் தில்லியின் டி.லிட். (1950) ஆனார்.
இவர் அக்டோபர் 12, 1952 அன்று தனது இல்லமான 14 கெப்பிலிசுடோன், ஈசுட்டுபர்ன், சுசெக்கில் இறந்தார். மேலும் அக்டோபர் 17 அன்று கிழக்கு பின்ச்லியில் உள்ள தூய மேரிபோன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.