மேகபதி ராஜமோகன் ரெட்டி (பிறப்பு 11 ஜூன் 1944) இந்தியாவின் 16 வது மக்களவையில் பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். ஆந்திராவில் நெல்லூர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.[1]
ரெட்டி, 1983இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக தேர்தலில் நின்று தோற்றார். 1985ஆம் ஆண்டில் ஆந்திர மாநில சட்டமன்றத்தில் அதே கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989இல் மக்களவையில் காங்கிரசின் உறுப்பினரானார். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக இரு முறை 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக செல்லும் முயற்சிகள் தோல்வியுற்றன. 2004ஆம் ஆண்டில் நர்சரோபேட்டை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும், 2009இல் நெல்லூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார். பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு கட்சியில் உறுப்பினரானார். இடைத்தேர்தலில் 15வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] மேலும் அக்கட்சியின் மக்களவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]