மேகபதி கௌதம் ரெட்டி | |
---|---|
2020இல் கௌதம் ரெட்டி | |
ஆந்திரப் பிரதேச அரசில் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் | |
பதவியில் 19 ஜூன் 2019 – 21 பெப்ரவரி 2022 | |
முன்னையவர் | நாரா லோகேசு[1] |
பின்னவர் | குடிவாடா அமர்நாத் |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2014 – 21 பெப்ரவரி 2022 | |
முன்னையவர் | அனம் ராமநாராயண ரெட்டி |
தொகுதி | ஆத்மகூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிராமணப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | 2 நவம்பர் 1971
இறப்பு | 21 பெப்ரவரி 2022 ஐதராபாத்து, இந்தியா | (அகவை 50)
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | சிறீகீர்த்தி |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | மேகபதி இராஜ்மோகன் ரெட்டி (தந்தை) |
முன்னாள் மாணவர் | மான்செஸ்டர் பல்கலைக்கழகம் |
பணி | தொழிலதிபர், அரசியல்வாதி |
மேகபதி கௌதம் ரெட்டி (Mekapati Goutham Reddy) (2 நவம்பர் 1971 - 21 பிப்ரவரி 2022) ஒரு இந்திய தொழிலதிபரும்,[2] ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். ஆந்திரப் பிரதேச அரசில் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார். இரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக 2014 முதல் 2022 இல் தான் இறக்கும் வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் ஆத்மகூர் சட்டப் பேரவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
ஒரு அமைச்சராக, தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் புதிய கொள்கைகளை வகுப்பதில் முயற்சிகளை மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்பம் ஆந்திரப் பிரதேசத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் காரணியாக கருதினார். மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிப்ரவரி 2022 இல் துபாய் எக்ஸ்போ 2020 க்கு இவர் ஒரு பிரதிநிதி குழுவை வழிநடத்தினார்.
மேகபதி கவுதம் ரெட்டி, 1971 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி மேகபதி இராஜ்மோகன் ரெட்டி மற்றும் மணி மஞ்சரிக்கு மகனாகப் பிறந்தார். இவர் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பிராமணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பிருத்வி குமார் ரெட்டி மற்றும் விக்ரம் ரெட்டி என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். இவரது தந்தை இராஜ்மோகன் ரெட்டி, நெல்லூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது தந்தைவழி மாமா மேகபதி சந்திரசேகர் ரெட்டியும் ஒரு அரசியல்வாதியாவார்.[3]
ரெட்டி தனது பள்ளிப்படிப்பை தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் சர்வதேசப் பள்ளியில் பயின்றார். பின்னர், ஐதராபாத்திலுள்ள பத்ருகா வணிகவியல் மற்றும் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[4] ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 1994 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் ஆடை மற்றும் துணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5] இவர் சிறீகீர்த்தி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6][7]
ரெட்டி 2014 ஆம் ஆண்டு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆத்மகூர் தொகுதியில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.[8] 2014 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தற்போதைய அனம் ராமநாராயண ரெட்டிக்கு எதிராக வெற்றி பெற்றார்.[5][6]
2019 தேர்தலில், மீண்டும் ஆத்மகூர் தொகுதியில் போட்டியிட்டு, தனது நெருங்கிய எதிரியான தெலுங்குதேசம் கட்சியின் பொலிநேனி கிருஷ்ணய்யாவை எதிர்த்து சட்டப் பேரவை உறுப்பினரானார்.[5] தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில். தனது சொத்து மதிப்பாக ₹61 கோடி (அமெரிக்க டாலர் $7.6 மில்லியன்) எனத் தெரிவித்தார்.[9] ஜூன் 2019 இல், இவர் மாநில அரசாங்கத்தின் அமைச்சரவையில் சேர்ந்தா. இவருக்கு தொழில்கள், வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது.[10][11][12]
கௌதம் ரெட்டி, துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியிலிருந்து திரும்பிய பிறகு, 2022 இல் 50 வயதில் திடீரென மாரடைப்பு காரணமாக இறந்தார். இது ஆந்திர பிரதேச அரசியல் மற்றும் அதன் தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க இழப்பைக் குறிக்கிறது.[3][13]
{{cite web}}
: Empty citation (help)