மேக்னா நாயர் | |
---|---|
பிறப்பு | மேகா நாயர் 29 மே 1989 ஆலப்புழா, கேரளம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008-தற்போது வரை |
மேக்னா நாயர் (Meghna Nair, பிறப்பு: மே 29, 1989) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.[1][2]
18 வயதில், மேகா நாயர் முதன்முதலில் தங்கம் (2008) படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக முன்னணி பாத்திரத்தை ஏற்று நடித்தார். அப்படத்தில் சத்தியராஜின் மனைவியாக நடித்தார். மேலும் அவரது உண்மையான வயதைத் தாண்டி காட்டும் விதமாக அவருக்கு ஒப்பணை செய்யப்பட்டது. பின்னர் இவர் விவேக்குடன் நகைச்சுவைக் காட்சிகளில் பசுபதி மே / பா. ராசக்காபாளையம் (2007), பாலியல் தொழிலாளியாக பூவா தலையா (2011) உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் சிவா சிறுத்தை (2011) படத்தில் ஒரு காவல் அதிகாரி பாத்திரத்தை இவருக்கு அளித்தார். அந்த பாத்திரத்தை அளிப்பதற்கு முன்னாதாக. சிவா அவர் நடித்த நெல்லை சந்திப்பு (2012) திரைப்படத்தின் சில விளம்பர ஒளிப்படங்களைக் கண்டு அதில் ஈர்க்கப்பட்டு பின்னர் இவரைத் தேர்ந்தெடுத்தார். மேலும் மேகாவின் உயரமும் இயக்குனரை அப்படத்தில் நடிக்க வைக்க ஒரு காரணியாக இருந்தது. கார்த்தி, தமன்னாவுடன் இணைந்து, சிறுத்தை படத்தில் நடித்தது மேகாவின் திரை வாழ்வில் மிக உயர்ந்த படைப்பாக உள்ளது.[3] மேலும் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர் தனது திரைப் பெயரான மேகா நாயர் என்பதை மேக்னா நாயர் என 2011 சூனில் மாற்றினார்.[4] 2000 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 2010 களின் துவக்க ஆண்டுகளிலும் இவரது பல படங்கள் தயாரிப்புக்ககு மத்தியில் நிறுத்தப்பட்டன. இந்தப் படங்களில் அனிஷின் ஆதிக்கம், ஷாம் ஜோடியாக சஞ்சய் ராமின் சிவமயம் மற்றும் பெண் மையப்படுத்தப்பட்ட திரைப்படமான மன்மத ராஜ்யம் ஆகியவை நடிகைகள் அக்சயா, கீர்த்தி சாவ்லா, சங்கவி, தேஜாஸ்ரீ ஆகியோருடன் இணைந்து நடித்தார்.[5]
2010 ஆம் ஆண்டில், அவர் மலையாளம் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்தார். சுரேஷ் கோபியுடன் இணைந்து ரிங்டோன் (2010) மற்றும் திலீப்புடன் மிஸ்டர் மருமகன் (2012).[6][7] சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கீதாஞ்சலி" என்ற தொலைக்காட்சி தொடரில் தோன்றினார். ஏசியாநெட்டில் பிரபலமான உண்மைநிலை நிகழ்ச்சியாக இருந்த "நெஸ்லே மன்ச் ஸ்டார்ஸ்" நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
2005 | பரதச்சந்திரன் ஐ.பி.எஸ் | லேகா | மலையாளம் | |
2005 | ஹை | திரிப்தா | மலையாளம் | |
2005 | உனக்காக | திரிப்தா | தமிழ் | |
2005 | சரி சாக்கோ கொச்சின் மும்பை | நந்திதா | மலையாளம் | |
2006 | அவுட் ஆப் சிலபஸ் | பிரியா | மலையாளம் | |
2007 | பசுபதி மே / பா. ராசக்காபாளையம் | சாவித்ரி | தமிழ் | |
2008 | தங்கம் | மீனாட்சி | தமிழ் | |
2008 | தொடக்கம் | நான்சி | தமிழ் | |
2008 | தீபாவளி | சிறிஷா | தெலுங்கு | |
2010 | ரிங்டோன் | மீரா | மலையாளம் | |
2011 | சிறுத்தை | ஜான்சி | தமிழ் | |
2011 | பூவா தலையா | ரேகா | தமிழ் | |
2011 | கில்லாடி ராமன் | மீரா | மலையாளம் | |
2012 | மிஸ்டர் மருமகன் | மின்மினி | மலையாளம் | |
2012 | நெல்லை சந்திப்பு | லலிதா | தமிழ் | |
2012 | காதலிச்சு பார் | தேன்மொழி | தமிழ் | |
2012 | ஆதிக்கம் | தமிழ் | ||
2012 | சிவமயம் | தமிழ் | ||
2012 | மன்மத ராஜ்யம் | தமிழ் |
{{cite web}}
: Check |url=
value (help)