மேக்னா பந்த் Meghna Pant | |
---|---|
புத்தக வெளீயீட்டு விழாவில் | |
பிறப்பு | சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
தொழில் | பத்திரிக்கையாளர், |
மொழி | ஆங்கிலம் |
கல்வி | MBA |
கல்வி நிலையம் | புனித சேவியர் கல்லூரி, மும்பை, நான்யாங்கு வணீகப் பள்ளி |
வகைகள் | பெண்ணியம், சிறுகதை |
இணையதளம் | |
www |
மேக்னா பந்த் (Meghna Pant) ஓர் இந்திய எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். இலக்கியம், பாலினப் பிரச்சினைகள் மற்றும் பத்திரிகைத் துறையில் இவரது பங்களிப்பிற்காக இவர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில், இவர் ஒன் அண்ட்- எ- ஹாஃப் ஒய்ஃப் எனும் தனது முதல் புதினத்திற்காக மியூஸ் இந்தியா தேசிய இலக்கிய இளம் எழுத்தாளர் விருதை வென்றார். இவரது சிறுகதைத் தொகுப்பு, ஹேப்பி பர்த்டே அண்ட் அத்ர் இசுட்டோரிசு ஃபிராங்க் ஓ'கானர் சர்வதேச விருதுக்காக பட்டியலிடப்பட்டது. [1]
பந்த் முன்பு மும்பை மற்றும் நியூயார்க்கில் டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் ப்ளூம்பெர்க்-யுடிவி ஆகியவற்றில் வணிக செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார். [2][3] 2008 நிதி நெருக்கடியின் போது இவர் நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) அறிக்கை வாசித்தார். [1] முழுநேர எழுத்து வாழ்க்கையினைத் தொடர இவர் 2013 இல் அந்தப் பணியில் இருந்து விலகி [1] இந்தியா திரும்பினார். [3]
இவரது முதல் புதினமான ஒன் & எ ஹாஃப் வைஃப் (வெஸ்ட்லேண்ட், 2012) தேசிய மியூஸ் இந்தியா இளம் எழுத்தாளர் விருதை (2014) வென்றது மற்றும் அமேசான் பிரேக் த்ரூ புதின விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது . [4]
பந்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான ஹேப்பி பர்த்டே [1] (ரேண்டம் ஹவுஸ், 2013) ஃபிராங்க் ஓ'கானர் சர்வதேச விருதுக்காக (2014) பட்டியலிடப்பட்டது. [5] இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தி ட்ரபிள் வித் வுமன் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
2015 ஆம் ஆண்டில், மும்பையில் "ஃபெமினிஸ்ட் ராணி" என்ற மாதாந்திர குழு விவாதத்தை இவர் தொடங்கினார், இதில் பல இந்தியப் பெண்ணியவாதிகளின் நேர்காணல்கள் இடம்பெற்றன. [3] [6] மூன்று வருட கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இவர் தனது முதல் புனைகதை அல்லாத ஃபெமினிஸ்ட் ராணி எனும் புத்தகத்தினை 2018 இல் [3] ஷைலி சோப்ராவுடன் இணைந்து எழுதினார். [7] இவரது இரண்டாவது புனைகதை அல்லாத புத்தகம் , 2019 ல் வெளியான ஹவ் டூ கெட் பப்ளிசிடு இன் இண்டியா வெளியீட்டுத் துறை மற்றும் எழுத்தாளர்களின் நேர்காணல்களின் அடிப்படையில் உருவானது. [8]
பந்த் , ஒப்புதல், வன்கலவி, [9] குடும்ப வன்முறை, கருச்சிதைவு, [10] பதிலித்தாய், உடல் இவமானம் [11] ஆகிய பிரச்சினைகள் பற்றி எழுதியுள்ளார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் [12] மற்றும் தி ஹஃபிங்டன் போஸ்ட், [13] மற்றும் சி தெ பீப்பிள் ஆகியவற்றில் பெண்களுக்கான பொதுப் பாதுகாப்பு அலுவலராக இருந்தார். [14] 2018 ஆம் ஆண்டில், பாலின சமத்துவம் குறித்த இவரது படைப்பிற்காக லாட்லி மீடியா விருது வழங்கப்பட்டது. [15]
குடும்ப வன்முறையில் இருந்து தப்பிப்பிழைத்தவராக, [16] பல தளங்களில் பேசினார், குடும்ப வன்முறைக்கு எதிராகப் பேசும்படி பெண்களை வலியுறுத்தினார். இவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழா உட்பட பல இலக்கிய விழாக்கள் மற்றும் மாநாடுகளில் பேசியுள்ளார் [17] டாடா இலக்கிய விழா, [18] காலா கோடா இலக்கியம் விழா, [19] புனே சர்வதேச இலக்கிய விழா, [20] மற்றும் ஐ.நா பெண்ணிய மாநாடு ஆகிய குறிப்பிடத்தகுந்தது ஆகும். 2018 இல்,ஃபர்சிடு பார்ட் தொகுத்து வழங்கிய #MeToo உரையாடல்கள் நிகழ்வில் கலந்துகொண்டார். [21]
பந்தின் சிறுகதைகள் இவதார் ரிவியூ, [22] வசஃபாரி, எக்லெக்டிகா, [23] மற்றும் கியூஎல்ஆர்எஸ், [24] மற்றும் இவரது கதை "பூந்திங்" ஆகியவை இமாலயன் வில்:ஜர்னிசு ஈசுட்டு ஆஃப் சவுத்-ஈசுட்டுவில் வெளியிடப்பட்டது.