மேட்டூர் | |||||||
— தேர்வு நிலை நகராட்சி் — | |||||||
ஆள்கூறு | 11°47′N 77°49′E / 11.79°N 77.81°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | சேலம் | ||||||
வட்டம் | மேட்டூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
ஆணையர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | மேட்டூர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
எச். சதாசிவம் (பாமக) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
52,813 (2011[update]) • 3,630/km2 (9,402/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
14.55 சதுர கிலோமீட்டர்கள் (5.62 sq mi) • 153 மீட்டர்கள் (502 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/mettur |
மேட்டூர் (Mettur), என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு மேட்டூர் அணை என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது.
இவ்வூரின் அமைவிடம் 11°28′N 77°28′E / 11.47°N 77.47°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயரத்தில் இருக்கின்றது.
காவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,282 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 52,813 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4286 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 10,261 மற்றும் 222 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.43%, இசுலாமியர்கள் 3.58%, கிறித்தவர்கள் 7.72% , மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[5]