மேரி இலீ எகர் (Mary Lea Heger) (ஜூலை 13, 1897 – ஜூலை 13, 1983, பின்னர் மேரி இலீ சேன் எனப்பட்டவர்) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் உடுக்கணத்திடையே உள்ள ஊடகம் குறித்து முதன்மையான கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். இவர் பிறகு புலமுதல்வர் ஈ, மெக்கென்றி நூலகத்தின் இலிக் வான்காணக ஆவணகத்தையும் நிறுவினார். இந்த இலிக் வான்காணக நூலக ஆவணகம் மேர் இலீ சேன் ஆவணகம் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1]
இவர் தெலாவேரில் வில்மிங்டனில் பிறந்தார். இளமையில் இவரது குடும்பம் மேற்கே உள்ளசான் பிரான்சிசுகோ கடற்கரையில் உள்ள பெல்வதேருக்குக் குடியேறியது. இவரது இளமைக்காலம் இங்கேயே கழிந்தது.[1] இவர் 1919 இல் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியலில் இளவல் பட்டத்தைப் பெற்றார்.[1] இவர் 1920 இல் சி. டொனால்டு சேனை மணந்த பிறகு, இலிக் வான்காணகத்தில் வில்லியம் வாலாசு கேம்பெலின் மேற்பார்வையில் தன் முனைவர் பட்டத்தை 1924 இல் பெற்றார். இவ்ரது ஆய்வு முதன்முதலாக தொலைவில் உள்ள இரும விண்மீகளின் கதிர்நிரல்களில் அமைந்த நிலைத்த கருக்கான சோடியம் கதிர்நிரல் வரியை உடுக்கணத்திடையே உள்ள ஊடகத்தினது என இனங்கண்டது.[1] இவர் உடுக்கணத்திடையே அமைந்த விரவிய பட்டையைக் கண்டுபிடித்தார்.[2]
தனது இரு குழந்தைகளை வளர்க்க, இவர் தன் தொழில்முறை வாழ்க்கையைத் துறந்தார்.[1] இரண்டாம் உலகப் போரின் முடிவில் தன் கணவை இலிக் வான்காணக இயக்குநரானதும், இவர் அனைவராலும் அறியப்பட்ட வானியல் விருந்தோம்புநர் ஆனார். இவரது விருந்தோம்பல் பலரால் பாராட்டப்பட்டது.[1]
இவர் தனது 86 ஆவது பிறந்த நாளன்று, அதாவது 1983 ஜூலை 13 இல் மாரடைப்பால் கலிபோர்னியாவில் அமைந்த சுகாட்சு வேலியில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.[1]