மேரி எம்மா பிருடு (Mary Emma Byrd) (நவம்பர் 15, 1849 – ஜூலை 13, 1934)ஓர் அமெரிக்கக் கல்வியியலாளரும் முன்னோடியான வானியல் ஆசிரியரும் ஆவார்[1] இவர் கல்லூரி வானியல் ஆசிரியர் ஆவார்.[2] இவர் தன்னளவில் சிறந்த வானியலாளரும் ஆவார். இவர் ஒளிப்படங்கள் வழியாக வால்வெள்ளிகளின் இருப்புகளைத் தீர்மானித்தார்.[3]
இவர் 1849 நவம்பர் 15 இல் மிச்சிகனில் உள்ள இலேராயில் பிறந்தார். இவரது தந்தையார் மாண்புறு ஜான் அட்டிங்டன் பிருடு ஆவார்; இவரது தாயார் எலிசபெத் அடிலைடே உலோவே ஆவார். இவர் இவ்விருவரின் ஆறு குழந்தைகளில் இர்ன்டாமவர் ஆவார்.[4] இவரது குடும்பம் 1855 இல் கான்சாசு நகர்ந்தது.
இவரது தந்தையார் அடிமையுடைமையும் அடிமை வணிகத்தையும் முற்றிலும் எதிர்ப்பவர். இவரது தாயார் ஜான் எந்தேகாட் கால்வழியில் வந்தவர்.
இவர் தம் பெற்றோரால் உறுதியான தூய்மைவாத நம்பிக்கைகளோடும் உயர் அறநெறி கொள்கைகளோடும் வளர்க்கப்பட்டார்மிவரது தாய்மாமா டேவிடு உலோவே கான்சாசு நீதிபதியாகவும் அமெரீக்கப் பேராயக் கட்சியிலும் ஒருமுறை பதவி வகித்தவர். டேவிடு உலோவமரசியலும் அறத்துறையும் ஒன்றிணைய இயலாதவை என இரண்டாம் முறை கட்சியால் மீளத் தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை. இவர் 1934 ஜூலை 13 இல் மூளை குருதிக்கசிவால் கான்சாசில் அமைந்த இலாரன்சில் இறந்தார். இவர் ஓக்கில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[5]
அக்காலத்தில் அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பெண் நல கல்வியைப் பெறுதல் மிகவும் அரிதாக இருந்தது.[6] மேரி பிருடும் இதற்கு விதிவிலக்காக அமைய முடியவில்லை. அவர் கல்வி கற்பது அரிதாகவே விளங்கியது. எனவே, இவர் கல்வி கற்கும்போதே ஆசிரியராகவும் பணிபுரிய நேர்ந்துள்ளது. இவர் இலீவன்வர்த் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். இவர் 1871 முதல் 1874 வரை ஓபெர்லின் கல்லூயில் சேர்ந்து படித்தார். அப்போது அங்கு ஜான் மில்லட் எல்லிசு கல்லூரித் தலைவராக இருந்தார். இவர் பட்டம் பெறும் முன்பே ஓபெர்லின் கல்லூரியில் இருந்து தங்கிவிட்டார். இவர் 1878 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இவர் எட்வார்டு சார்லசு பிக்கெரிங்கின் கீழ் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். இவர் தன் முனைவர் பட்டத்தை 1904 இல் கார்லெட்டான் கல்லூரியில் பெற்றார்.
ஆண்களோடு இணைந்து கல்ப்புக்கல்வி பெற்ற இளம்பெண்களில் இவர் ஒருவராவார். இவரோடு படித்தவருள் குறிப்பிடத் தக்கவர் அலைசு பிரீமன் பால்மர் ஆவார். இவர் தன் இறப்புக்கு முன்பு சிலகாலம் மனாசுகுவானில் இருந்த கோசுட்டு இசுடாரில் பணிபுரிந்தார்.
இவர் பின்வரும் பதவிகளில் இருந்து கல்வி பயிறுவித்துள்ளார்:
இவர் 1906 இல் தன் உச்சப் பணியின்போது சுமித் கல்லூரி பதவிகளில் இருந்து விலகியுள்ளார்[8] இதற்குக் காரணமாக அமைந்தது, கல்லூரி ஆந்திரூ கார்னிகி, ஜான் டி. இராக்பெல்லர் ஆகிய இருவரிடம் இருந்து பணம்பெற்ரதாகும். இச்செயலை இவரால் ஏற்க முடியவில்லை. பதவி விலகியதும் இவர் கான்சாசு, இலாரன்சுக்குத் திரும்பியுள்ளார். பிறகு, இவர் தொடர்ந்து மக்கள் வானியல் இதழில் பல வானியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
தன் வாழ்நாளில் பிருடு பின்வரும் உறுப்பினர் பதவிகளை வகித்துள்ளார்:
இவர் கீழுள்ள இரண்டு நூல்களை எழுதியுள்ளார்: