மேற்கு வர்த்தமான் மாவட்டம் পশ্চিম বর্ধমান জেলা | |
---|---|
![]() மேற்கு வர்த்தமான்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் கோட்டம் |
தலைமையகம் | ஆசான்சோல் |
பரப்பு | 1,603.17 km2 (618.99 sq mi) |
மக்கட்தொகை | 2882031 (2011) |
படிப்பறிவு | 78.75 per cent |
பாலின விகிதம் | 922 |
மக்களவைத்தொகுதிகள் | ஆசான்சோல் மற்றும் வர்த்தமான் - துர்க்காப்பூர் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | பாரபானி, பாண்டவேஸ்வர், ராணிகஞ்ச், ஜமுரீயா, ஆசான்சோல் வடக்கு, ஆசான்சோல் தெற்கு, குல்டி, துர்க்காப்பூர் கிழக்கு, துர்க்காப்பூர் மேற்கு, கங்சா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 2, 19 மற்றும் 14, பெரும் தலைநெடுஞ்சாலை |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1442 mm |
மேற்கு வர்த்தமான் மாவட்டம் (Paschim Bardhaman district), இந்தியாவின் கிழக்கில் அமைந்த மேற்கு வங்காள மாநிலத்தின் வர்த்தமான் கோட்டத்தில், சுரங்கத் தொழில்கள் கொண்ட மாவட்டம் ஆகும். இதன் தலைமையிடம் ஆசான்சோல் நகரம், மாநகராட்சியுன் கூடியது.
7 ஏப்ரல் 2017ல் முந்தைய வர்தமான் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு மேற்கு வர்த்தமான் மாவட்டம் நிறுவப்பட்டது. முந்தைய வர்தமான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு வர்த்தமான் மாவட்டம் நிறுவப்பட்டது.
இப்பகுதியில் சமயப் பிரச்சாரங்களை மேற்கொண்ட சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரரை சிறப்பிக்கும் பொருட்டு இம்மாவட்டத்திற்கு வர்தமான் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. வர்த்தமான் என்பதற்கு செழிப்புடன் கூடிய வளமான பகுதி எனப் பொருளாகும்.[1]
வர்த்தமான் கோட்டத்தின் கிழக்கில் சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் நீட்சி மேற்கு வர்த்தமான் மாவட்டம் வரை நீண்டுள்ளது.
18ம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் நிலக்கரி, அலுமனியம் மற்றும் இரும்புக் கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மாவட்டம் நிலக்கரி, அலுமினியம், இரும்புச் சுரங்கங்கள் கொண்டுள்ளதால், இப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்பட காரணமாயிற்று.[2][3]
இம்மாவட்டம் ஆசான்சோல் மற்றும் துர்க்காப்பூர் என வருவாய் இரண்டு உட்கோட்டங்களைக் கொண்டது.[4][5]
மேலும் இம்மாவட்டம் 16 காவல் நிலையங்களும், எட்டு ஊராட்சி ஒன்றியங்களையும், மூன்று நகராட்சிகளையும், இரண்டு மாநகராட்சிகளையும், 62 கிராமப் பஞ்சாயத்துக்களையும் கொண்டுள்ளது.[5][6]
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மேற்கு வர்த்தமான் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 28,82,031 ஆகும். அதில் ஆண்கள் 14,97,479 (52%) ஆகவும் மற்றும் பெண்கள் 1,384,452 (48%) ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்டபவர்கள் 3,22,268 ஆக உள்ளனர்.[7] எழுத்தறிவு பெற்றவர்கள் 2,015,056 (78.75%) ஆகவும் உள்ளனர்.[7]
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தில் இந்துக்கள் 24,42,414 (84.75%) ஆகவும், இசுலாமியர்கள் 3,84,027 (13.32%) ஆகவும், கிறித்தவர்கள் 12,636 (0.44%) ஆகவும், பிறர் 42,9541(1.49%) ஆகவும் உள்ளனர்.[8]
இந்தியாவில் இம்மாவட்டத்தின் ராணிகஞ்ச் பகுதியில் முதன் முதலாக 1774ல் இந்தியாவில் கம்பெனி ஆட்சியினரால் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டு நிலக்கரி சுரங்கங்கள் தோண்டப்பட்டது.[9]
1975ல் இந்தியா நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து நிலக்கரிச் சுரங்கங்களை தன் வசப்படுத்தியது.[10]
கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் திறந்த வெளி சுரங்கங்களிலிருந்து ஆண்டிற்கு 30 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. மேலும் நிலத்தடி சுரங்கங்களிலிருந்து 10 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்கிறது.[11][12]
இம்மாவட்டத்தின் பர்ன்பூரில் உள்ள இந்திய உருக்கு ஆணையத்தின் துணை நிறுவனம், ஒராண்டிற்கு 2.5 மில்லியன் டன் கச்சா இரும்பை உற்பத்தி செய்கிறது.[13][14]
1950ல் ஆசான்சோல் அருகே நிறுவப்பட்ட சித்தரஞ்சன் லோகோமோடிவ் ஒர்க்ஸ் எனும் பொதுத்துறை நிறுவனம் மின்சார இரயில் எஞ்சின்களை உற்பத்தி செய்கிறது.[15][16]
இந்திய உருக்கு ஆணையத்தின் துணை நிறுவனமான, இம்மாவட்டத்தில் உள்ள துர்க்காப்பூர் இரும்பாலை, ஆண்டிற்கு 2.2 மில்லியன் கச்சா இரும்பை உற்பத்தி செய்கிறது.[17]
7 நடைமேடைகள் கொண்டது ஆசான்சோல் தொடருந்து நிலையம், இத்தொடருந்து நிலையத்தின் வழியாக நாளொன்றுக்கு 202 தொடருந்துகள் கடந்து செல்கிறது. நாளொன்றுக்கு 48 தொடருந்துகள் ஆசான்சோல் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. 50 தொடருந்துகள் நிறுத்தப்படுகிறது. ஹவுரா - தில்லி செல்லும் அனைத்து தொடருந்துகளும் இம்மாவட்டத் தலைமையிட நகரமான ஆசான்சோல் வழியாகச் செல்கிறது. ஆசான்சோல் தொடருந்து நிலையம், தில்லி, கான்பூர், அம்பாலா, பாட்னா, அவுரா நகரங்களை இணைக்கிறது.[18]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)