மைக்கேல் கிளிங்கர் (Michael Klingerபிறப்பு: ஜூலை 4, 1980) ஒரு ஆஸ்திரேலிய முன்னாள் முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் 2019 இல் ஓய்வு பெற்றபோது பிக் பாஷ் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்தார்.[1] 2008-09 ஆண்டுகளில் நடைபெற்ற பிரீமியர் லீக் துடுப்பாட்ட தொடர்களில் கிளிங்கர் விக்டோரியாவுக்காகவும், செயின்ட் கில்டா கிரிக்கெட் சங்கத்திற்காகவும் விளையாடினார். 2009 ஆம் ஆண்டுகளில் தெற்கு ஆஸ்திரேலியா ரெட்பேக் அணிக்காக விளையாடினார். 2010 ஆம் ஆண்டின் அந்த அணியின் தலைவராக நியமனம் ஆனார். 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டின் மாநிலத்தின் சிறந்த வீரராகத் தேர்வானார்.2011 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் ஏலத்தில் இவர் கொச்சி டஸ்கர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.2014 ஆம் ஆண்டில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காகவும் மேற்கு ஆத்திரேலிய அணிக்காகவும் இவர் விளையாடினார். மார்ச் 2018 இல், அவர் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[2]
கிளிங்கர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவின் கியூவில் பிறந்தார், இவர் யூதர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[3][4][5][6] டீக்கின் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயன்பாட்டு அறிவியல் பட்டம் மற்றும் முதுகலை வணிக (விளையாட்டு மேலாண்மை) பட்டம் பெற்றார்.[7]
கிளிங்கர் ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார் - இவரது சக வீரரான மைக்கேல் கிளார்க், பின்னாளில் தேசிய அணியின் கேப்டனாக ஆனார்.[8] தனது 18 ஆவது வயதில் இவர் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 2001 ஆம் ஆண்டில் இவர் 99 ஓட்டங்களில் இருந்தபோது அப்போதைய அணியின் தலைவர் பால் ரைஃபேல் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இந்த நிகழ்வு சர்ச்சையானது.[9] மேலும் 99 ஓட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஒருவர் இருக்கும் போது ஓர் அணி டிக்ளேர் செய்தது அதுவே முதல் முறையாகும்.[10] இது கிளிங்கருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்பு 2005-06 ஆம் ஆண்டில் விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணிக்காக இவர் விளையாடத் தேர்வானார்.
கிளிங்கர் 2008-09 ஆண்டுகளில் தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ரெட்பேக் அணியில் சேர்ந்தார், அவர் துவக்கத்தில் 3 வது இடத்தில் மட்டையடத் தீர்மானித்தார். அந்த முடிவு அவருக்கு வெற்றி பெற்றுத் தந்தது. விக்டோரியாத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 150 ஓட்டங்கள் எடுத்தார்.[11] நவம்பர் 11 அன்று மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கிளிங்கர் தனது முதல் இருநூறு ஓட்டங்களை அடித்தார் அந்தப் போட்டியில் மொத்தமாக இவர் 255 ஓட்டங்களை எடுத்தார்[12] இடங்களைப் பிடித்தார், மேலும் இவர் ஷெஃபீல்ட் ஷீல்ட் மற்றும் ஃபோர்டு ரேஞ்சர் கோப்பை இரண்டு தொடர்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி அதிக ஓட்டங்களை எடுத்தார்.
2011 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் ஏலத்தில் இவர் கொச்சி டஸ்கர்ஸ் அணியால் 75,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[13]
2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சிறந்த மாநிலத் துடுபாட்ட வீரருக்கான விருதுகளைப் பெற்றார்.