மைக்கேல் ஜேம்ஸ் சோ | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 16, 1986 நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–இன்று வரை |
மைக்கேல் ஜேம்ஸ் சோ (ஆங்கில மொழி: Michael James Shaw) (பிறப்பு:செப்டம்பர் 16, 1986) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 'ஏஜென்ட் டேரில்/மைக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த லிமிட்லஸ் (2015-2016)[1] என்ற தொலைக்காட்சி தொடர் இவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து பிளட் & டிரெசுரே போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[2] போன்ற திரைப்படங்களில் 'கோர்வஸ் கிளைவ்' என்ற கணினி குரல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.