மைக்கேல் ஸ்கிரிவென் Michael Scriven | |
---|---|
பிறப்பு | 28 மார்ச்சு 1928 இங்கிலாந்து |
இறப்பு | 23 ஆகத்து 2023 கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 95)
அறியப்படுவது | மதிப்பீட்டின் கோட்பாடு மற்றும் நடைமுறைகள் |
மைக்கேல் ஸ்கிரிவென் (Michael Scriven;1928) இங்கிலாந்தில் பிறந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் பல்துறை நிபுணராகவும் கல்வியியல் நிபுணராகவும் விளங்கினார். மதிப்பீட்டின் கோட்பாடு மற்றும் நடைமுறைகள் இவருடைய மிகச் சிறந்த பங்களிப்பாகும்.[1][2]
ஸ்க்ரிவன் இங்கிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வளர்ந்தார். மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டமும் (1948) மற்றும் முதுகலைப் பட்டமும் (1950) பெற்றவர். அங்கு இவர் 1946 முதல் டிரினிட்டி கல்லூரியில் தங்கியிருந்து கல்லூரியின் நுழைவு உதவித்தொகையைப் பெற்றார்.[3] பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் (1956) மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4][5]
ஸ்க்ரீவன் அமெரிக்க கல்வி ஆராய்ச்சி சங்கம் மற்றும் அமெரிக்க மதிப்பீட்டு சங்கத்தின் தலைவராக இருந்தார். ஜர்னல் ஆஃப் மல்டிடிசிப்ளினரி ஏவல்யூவேஷன் என்பதன் ஆசிரியராகவும் இணை நிறுவனராகவும் இருந்தார். பின்னர் கலிபோர்னியாவிலுள்ள கிளேர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியராக இருந்தார்.
மைக்கேல் ஸ்கிரிவென் நிரல் மதிப்பீட்டிற்கான பட்டியலைக் கண்டுபிடித்தார். அதை வைத்து இன்று தர ஆய்வுகளிலும் தரவு கள ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசாணை 143 நாள்:19.09.2011இன் படி 2012-13 ஆம் கல்வியாண்டில் முப்பருவ முறையில் முழுமையான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும். 2013-14 ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் செயல்படுத்தப்படும். 2015ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவமுறையில் இந்த கற்பித்தல் மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டு முறைகள் உள்ளன. இந்த மதிப்பீட்டு முறைகளை உலகுக்கு வெளிக் கொண்டு வந்தவர் மைக்கேல் ஸ்கிரிவென் ஆவார்.
மைக்கேல் ஸ்கிரிவென் இடைநிலை ஆய்வில் குறிப்பிடத்தக்க வெளியீடுகளைச் செய்துள்ளார். இடைநிலை ஆய்வில் மதிப்பீட்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கணினி ஆய்வுகள், தொழில்நுட்பம் மற்றும் மதிப்பீடு போன்ற பல்வேறு துறைகளில் 400 க்கும் மேற்பட்ட வெளியீடுகளை முடித்துள்ளார்.
...the pioneering work of Scriven on the conceptualization of evaluation's unique logic and methodology has provided a solid theoretical foundation for what I have attempted here...