தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 27 மே 1975 மவுண்ட் லாலி, மேற்கு ஆஸ்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | மிஸ்டர் கிரிக்கெட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.80[1] m (5 அடி 11 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | Batsman | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | டேவிட் ஹசி (சகோதரர்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 393) | 3 நவம்பர் 2005 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 3 சனவரி 2013 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 150) | 1 பெப்ரவரி 2004 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 3 செப்டம்பர் 2012 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 48 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 4) | 17 பெப்ரவரி 2005 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 5 அக்டோபர் 2012 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994/95–2012/13 | மேற்கு ஆஸ்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001–2003 | நார்தாம்ப்டன்ஷைர் (squad no. 3) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2004 | குளோசெஸ்டர்சைர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005 | துர்காம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2013 | சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 48) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–2012/13 | பெர்த் ஸ்கார்ச்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013/14–2015/16 | [சிட்னி தண்டர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014 | மும்பை இந்தியன்ஸ் (squad no. 48) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015 | சென்னை சூப்பர் கிங்ஸ்s (squad no. 48) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015/16 | கேன்டர்பரி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | லூசியா ஸோக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 22 திசம்பர் 2016 |
மைக்கல் எட்வர்டு கில்லீன் அசி (Michael Edward Killeen Hussey - பி. 27 மே 1975) பரவலாக மைக் ஹசி என அறியப்படும் இவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர். மிஸ்டர் கிரிக்கெட் எனும் புனைபெயரால் பரவலாக அறியப்படுபவர். ஓரளவு வயதான பின்னரேயே ஆத்திரேலிய அணியில் இடம்பிடித்தார்.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 28 ஆவது வயதிலும், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது 30 ஆவது வயதிலும் அறிமுகமானார்.[2] இவர் பன்னாட்டு ஆட்டங்களில் அறிமுகமாகும் முன்னர் முதல்-தர ஆட்டங்களில் 15,313 ஓட்டங்கள் எடுத்திருந்தார்[3]
அதிக வயதில் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானாலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.2006 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்தார்[4]
முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இங்கிலாந்தில் உள்ள மூன்று மாகாணத் துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். டிசம்பர் 29,2012 அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[5] 2015 ஆம் ஆண்டின் பிக்பாஷ் போட்டிகளோடு அனைத்து வடிவப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
பெப்ரவரி 1, 2004 இல் பெர்த்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 17 ஒட்டங்களை எடுத்து 5 இலக்குகள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற உதவினார்.
அகடோபர் 9, 2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சூப்பர் சீரிசின் மூன்றாவது போட்டியில் மகாயா நிதினி வீசிய பந்தை விளையாட்டு அரங்கத்தின் கூரையின் மேல் அடித்தார்.பெப்ரவரி 6, 2006 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த ஆத்திரேலிய வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்திற்கான வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், ஆண்ட்ரு சைமண்ட்ஸ், பிறெட் லீ மற்றும் இவரும் தலா 22 வாக்குகள் பெற்றனர்.
சைமண்ட்ஸ் குடி போதையில் இருந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் தகுதிநீக்கம் பெற்றார். அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், பிறெட் லீ ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று ஆலன்பார்டர் பதக்கம் பெற்றார். நவம்பர், 2006 இல் மும்பையில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருது வழங்கும் விழாவில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டிற்கான உலக லெவன் அணியில் 12 ஆவது வீரராக இடம்பெற்றார்.
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியத்தின் சுழல்முறை தலைவர் திட்டத்தினால் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டித் தொடரில்
ரிக்கிபாண்டிங்கிற்குப் பதிலாக மைக் ஹசி
தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க பிராட் ஹாடினுடன் இனைந்து 165 ஓட்டங்கள் சேர்த்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 6 வது இலக்கிற்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனையைப் படைத்தனர்.[6][7][8][9]
.