மைசூர் சந்தன எண்ணெய் | |
---|---|
![]() கண்ணாடிச் சிமிழில் மைசூர் சந்தன எண்ணெய் | |
வகை | நறுமன எண்ணெய் |
இடம் | மைசூர் மாவட்டம் |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 2005 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://ipindia.nic.in |
மைசூர் சந்தன எண்ணெய் என்பது இந்தியாவின் கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் "அரச மரம்" என்று அழைக்கப்படும் சந்தன மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு நறுமண எண்ணெய் ஆகும். இதற்காக வளர்க்கப்படும் மர இனங்கள் உலகின் மிகச் சிறந்த மர வகைகளில் ஒன்றாகக் கூறப்படுகின்றன.[1] [2] [3]
தொடக்கத்தில் முதலாம் உலகப் போருக்கு முன்பு வரை, இந்த எண்ணெய் கச்சா எண்ணையாக இந்தியாவில் பிரித்தெடுக்கப்பட்டது. மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தனம் ஜெர்மனியில் வடிகட்டப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, கச்சா எண்ணெய் பிரித்தெடுப்பு முறையும் ஜெர்மனியில் வடிகட்டி, விற்பனை செய்யும் வழியும் வாய்புகளும் நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக மைசூர் அரசாங்கத்தின் கருவூலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. 1916-17ல், சந்தன மர எண்ணெயை இங்கேயே வடிகட்டுவதற்காக மைசூரில் அப்போதைய மைசூர் அரசாங்கத்தால் (இப்போது கர்நாடக அரசு) சந்தன மரத்திலிருந்து எண்ணெயை காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
1977 ஆம் ஆண்டில், மைசூர் மாவட்டத்தில் சுமார் 85,000 சந்தன மரங்கள் இருந்தன, மேலும் 1985-86 ஆம் ஆண்டில் சந்தன மரத்திலிருந்து பெற்ற மூலப்பொருளுக்கான உற்பத்தி 20,000 கிலோகிராம்கள் (44,000 lb) ஆகும். பொருளாதாரத்திற்கு அதன் முக்கியத்துவத்தை பாதுகாக்க, அரசிதழ் வெளியீடுகளின்படி ,அன்றைய சுதேச அரசான மைசூர் மாகாண அரசு ஒரு சிறப்பு சட்டங்களையும் விதிகளையும் அறிமுகப்படுத்தியது. அதன்படி சந்தன மரமானது ஒரு "அரச மரமாக" அறிவிக்கப்பட்டது.மேலும் இதனை மாநில அரசு கட்டுப்படுத்துகிறது. [4]
வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் புவியியல் குறியீட்டின் கீழ் இந்த எண்ணெய் பாதுகாப்புக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில், இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் அடையாளச் சட்டம் 1999 இன் கீழ் "மைசூர் சந்தன எண்ணெய்" என்று பட்டியலிடப்பட்டது, இதற்கான காப்புரிமை வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு ஜெனரலால் பதிவு செய்யப்பட்டது.[5]
சந்தன மரத்தின் தண்டு மற்றும் அதன் வேர்கள் எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. [4]
சோப்புகள், தூபங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியில் மைசூர் சந்தன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது; இது மத சடங்குகள், தோல் மற்றும் முடி சிகிச்சைக்காகவும் பிற சிகிச்சைகள் மற்றும் மருந்துகள்உற்பத்தியில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. சந்தன எண்ணெயில் பல வகைகள் உள்ளன, ஆனால் மைசூர் சந்தன எண்ணெய் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.[1] [6]
மைசூரில் உற்பத்தி செய்யப்படும் சந்தன எண்ணெய் உலகின் சந்தன மர உற்பத்தியில் 70% ஆகும். [7] இது ஒரு சிறந்த கலவை இலக்கி ஆகும. எனவே உலகில் பல பிரபலமான வாசனை திரவியங்களின் கலவையில் சந்தன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது; இதனால், இது உயர்ந்த கட்டணத்தில் விற்கப்படுகிறது. [7] இந்த எண்ணெய் நிலையான தரம் வாய்ந்த குறைந்தபட்சம் 90% சாண்டலோலைக் கொண்டுள்ளது, மேலும் இது பிற இடங்களில் உற்பத்தி செய்யப்படும் சந்தன எண்ணெயுடன் ஒப்பிடத்தக்கது. [8]
சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி, மைசூர் சந்தன மரத்துடன் அடையாளம் காணப்பட்டது, மேலும் இது கிழக்கின் மத, சமூக மற்றும் சடங்கு வாழ்க்கையுடன் ஒருங்கிணைந்ததாக இருந்தது. விவேகானந்தர், "இந்த மரத்தின் நீடித்த வாசனை திரவியம் உண்மையிலேயே உலகை வென்றதாகக் கூறலாம்" என்றார். [9] இது நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் மூலிகை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, மேலும் அதன் இனிமையான வாசனை பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பூச்சியால் பாதிக்கப்படாத மரத்தின் சந்தனக்கட்டை, இந்தியாவில் தளவாடங்கள் மற்றும் கோயில் கட்டமைப்புகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதன் எண்ணெய் மயக்கும்படியும் மற்றும் பாலுணர்வைக் தூண்டக்கூடியதாகவும் கருதப்படுகிறது, ஏனெனில் அதன் நறுமணம் ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஸ்டிரோனுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. [10] ஆயுர்வேத மருத்துவத்தில், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், புரோஸ்டேட் செயலிழப்பு, வயிற்றுப்போக்கு, செவி மற்றும் நுரையீரல் தொற்று ஆகியவற்றை எதிர்த்துச் செயலாற்றும் மருந்துகளில் சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தின் பயிற்சியாளர்கள் காலரா, கோனோரியா மற்றும் வயிற்று வலிக்கு சிகிச்சையளிக்க சந்தன எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். [10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help)