மைசூர் மல்லிகே | |
---|---|
இயக்கம் | டி. எஸ். நாகாபரணா |
தயாரிப்பு | ஸ்ரீஹரி கோடே |
கதை | டி. எஸ். நாகாபரணா சி. அஷ்வத் பசவராஜ் |
இசை | சி. அஷ்வத் |
நடிப்பு | கிரிஷ் கர்னாட் சுதாராணி ஹெச். ஜி. தத்தாத்ரேயா ஆனந்த் |
ஒளிப்பதிவு | பி. சி. கௌரிசங்கர் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | யஜமான் என்டர்பிரைசஸ் |
வெளியீடு | 1992 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடா |
மைசூர் மல்லிகே (Mysore Mallige) என்பது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய கன்னடத் திரைப்படமாகும், இது டி. எஸ். நாகாபர்னா[1] இயக்கி ஸ்ரீஹரி கோடாயால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் கதை 1928 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற கவிஞர் கே. எஸ். நரசிம்மஸ்வாமி எழுதிய இதே தலைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.[2] கவிதையின் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்கும் ஒரு முயற்சிதான் இத்திரைப்படம் ஆகும்.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய நடிகர்களான கிரிஷ் கர்னாட், சுதாராணி, ஆனந்த், சுந்தர் ராஜ் மற்றும் எச். ஜி. தத்தாத்ரேயா ஆகியோர் நடித்திருந்தனர்.[3]
இந்த திரைப்படம் வெளியிடப்பட்டபோது நல்ல வரவேற்பைப் பெற்றது. கன்னட மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றது இப்படத்தின் பாடலாசிரியர் நரசிம்ம ஸ்வாமி சிறந்த பாடல்களுக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். இந்தத் திரைப்படமானது பல கர்நாடகா மாநில திரைப்பட விருதுகளையும் சிறந்த திரைப்படத்தையும் சிறந்த நடிகை மற்றும் பிற தொழில்நுட்ப பிரிவுகளையும் பெற்றது.
கே. எஸ். நரசிம்ம ஸ்வாமி தனது 101 வது பிறந்த நாள் விழாவில், ஒரு முன்னணி கன்னட இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் 1994இல் வெளிவந்த இந்தித் திரைப்படமான 1942: ஏ லவ் ஸ்டோரி இப்படத்திற்கு உத்வேகம் அளித்தது என்று கூறினார்.[4][5]
மைசூரா மல்லிகே, என்பது கன்னட கவிஞர்களில் ஒருவரான கே. எஸ். நரசிம்ம ஸ்வாமி, என்பவர் தனது நிலத்தின் பேரில் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்டு கவிதைகளால் நெய்யப்பட்ட ஒரு கதையாகும். கிராமப்புறப் பெண்ணான பத்மா, தேசபக்தியில் ஆர்வமுள்ள மஞ்சு என்பவருடன் காதல் கொண்டுள்ளாள். அவரது தந்தை ஒரு கிராமத்தின் கணக்காளர், கிராமத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பில் அவர் ஒரு கருவி, அவர் மஞ்சுவின் நடவடிக்கைகளை எதிர்க்கிறார். அவர் தன்னுடைய மகளின் திருமணத்தை தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறார், ஆனால் பத்மாவும் மஞ்சுவும் ஒரு வளையல் விற்பனையாளரான சென்னையாவின் உதவியுடன் இணைகின்றனர். தேசியவாதிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் சென்னையாவை காப்பாற்றும் ஒரு முயற்சியில், மஞ்சு காயமடைந்து அவரை இழந்து விடுகிறார். கவிஞரது படைப்புகளை பின்னர் மஞுசுவின் மனைவி (பத்மா) வெளியிடுகிறார். இறுதியில் புத்தக வெளியீட்டு விழாவில் பத்மா மற்றும் மஞ்சு இருவரும் மகிழ்ச்சியுடன் இணைகின்றனர்.
இசையமைப்பாளர் சி. எஸ். அஷ்வத் இசையமைத்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் கவிஞர் கே.எஸ்.நரசிம்ம ஸ்வாமியின் இலக்கியத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது. இதில் 9 பாடல்கள் அமைந்திருந்தன.
{
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
1. | "ஹக்கியா ஹாடிகே" | எஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்பிரமணியம் & பி. ஆர். சாயா | ||||||||
2. | "கதலே தும்பிடா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
3. | "ஒன்டிரில்லு கனசல்லி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & எஸ். ஜானகி | ||||||||
4. | "தீபவு நின்னடே" | எஸ். ஜானகி | ||||||||
5. | "ஸ்ரீகெரேயா நீரால்லி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
6. | "நின்னா பிரேமத பரிய" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
7. | "பலேகார சென்னையா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
8. | "ஆகாசகே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
9. | "ராயரு பந்தரு" | ரத்னமாலா பிரகாஷ் |
இந்தப் படம் அதன் வெளியிட்டதிலிருந்து பின்வரும் விருதுகளை வென்றுள்ளது.