வகை | பொதுத்துறை வங்கி |
---|---|
நிலை | 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. |
முந்தியது | மைசூரின் வங்கி, நிறுவனம் |
நிறுவுகை | 2 அக்டோபர் 1913 | மைசூரின் வங்கி, நிறுவனம் என அறியப்பட்டது.
நிறுவனர்(கள்) | சர். விசுவேசுவரய்யா |
தலைமையகம் | , பெங்களூரு |
அமைவிட எண்ணிக்கை | 976 கிளைகள் மற்றும் 9 விரிவுபடுத்தும் மையங்கள் தலைமை அலுவலகம்: பெங்களூரு |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா முழுவதும் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | வங்கித் துறை, காப்பீடு, மூலதன சந்தைகள் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் |
உற்பத்திகள் | வைப்புகள், தனிநபர் வங்கி, C & I வங்கி சேவைகள், விவசாய சேவைகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி சேவைகள் |
சேவைகள் | கடன்கள், வைப்புகள், கைபேசி வங்கி, ஏடிஎம் சேவைகள், என்ஆர்ஐ சேவைகள் (NRI Services), ஆர்டிஜிஎஸ் , தேசிய மின்னணு நிதி மாற்றம் (NEFT), இணைய வங்கி, பற்று அட்டை [1] |
மொத்த பங்குத்தொகை | ▲3988 கோடிகள் மார்ச் 31, 2014 நிலவரப்படி[2] |
பணியாளர் | 10,627 (ஜூன் 30, 2014)
|
தாய் நிறுவனம் | பாரத ஸ்டேட் வங்கி (90.00% பங்குகளை வைத்திருப்பவர்) |
இணையத்தளம் | statebankofmysore |
மைசூர் ஸ்டேட் வங்கி (ஆங்கிலம்:State Bank of Mysore) அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் என்பது இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட 26 வங்கிகளில் ஒன்றாகும். இது, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகமுக்கியமான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியாகும். இவ்வங்கி பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டில், மைசூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர், மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[3]